ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

குவைட் பிரதமரின் வரலாற்றுப் பிரசித்திபெற்ற ஈராக் விஜயம்

ஈராக்- குவைட் ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நல்லுறவை மீளக் கட்டியெழுப்புமுகமாக குவைட் பிரதமர் ஷெய்க் நாஸர் முஹம்மத் அல் அஹ்மத் அல் ஸபாஹ் ஈராக்குக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். முன்னாள் ஈராக்கிய இராணுவ ஆட்சியாளர் சதாம் ஹூஸைன் மேற்கொண்ட குவைட் மீதான ஆக்கிரமிப்பின் விளைவாக சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்குமிடையிலான சுமுக உறவு சீர்குலைந்திருந்தது. 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி ஆக்கிரமிப்புக்குப் பின்னர் குவைட்டிய உயர்மட்டப் பிரமுகர் ஒருவரின் முதலாவது ஈராக் விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தின்போது ஈராக்கிய ஜனாதிபதி ஜலால் தலபானி, பிரதமர் நூரி அல் மாலிகி ஆகியோர் உள்ளிட்ட ஈராக்கிய உயர்மட்ட அதிகாரிகளை குவைட் பிரதமர் சந்திக்கவுள்ளார் என ஈராக் அரசாங்கப் பேச்சாளர் அலி அல் தப்பாஹ் புதன்கிழமை (12.01.2011) தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தைகளின் போது 1990 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பின் விளைவாக குவைட்டுக்கு நேர்ந்த சேதங்களுக்காகக் கோரப்பட்ட நஷ்ட ஈடு, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை என்பன குறித்துக் கவனம் செலுத்தப்பட இருப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது.

தன்னுடைய பெற்றோலிய வருமானத்தில் ஆண்டுதோறும் ஐந்து சதவீதத்தை ஈராக் குவைட்டுக்கு நஷ்ட ஈடாகச் செலுத்திவருகின்றது. அந்த வகையில், குவைட் ஈராக்கிடமிருந்து இதுவரை 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்ட ஈடாகப் பெற்றுள்ளது. இந்நிலையில், மேலும் 22 பில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்ட ஈடாகச் செலுத்தவேண்டும் என குவைட் ஈராக்கிடம் கோரியுள்ளது.

குவைட் பிரதமரின் புதன்கிழமை விஜயத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட குவைட் கரையோரப் பாதுகாப்புப் படையினருக்கும் ஈராக்கிய மீனவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு குவைட்டியர் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மூன்று ஈராக்கியர் படுகாயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பற்றி குவைட்டிய உள்ளக அமைச்சர், 'குவைட்டின் கடற்பரப்புக்குள் ஈராக்கிய மீனவர்கள் உட்பிரவேசிக்க முயன்றபோதே மேற்படி அசம்பாவிதம் இடம்பெற்ற'தெனவும், ஈராக் தரப்பினர், 'தமது நாட்டுக் கடற்பரப்புக்குள்தான் கைகலப்பு ஏற்பட்டுள்ள'தெனவும் செய்தி வெளியிட்டுள்ளனர். எது எப்படியிருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர இணக்கமும் நல்லுறவும் கட்டியெழுப்பப்பட வேண்டியதன் இன்றியமையாமையை இரண்டு நாட்டு அரசாங்கங்களும் நன்கு உணர்ந்துள்ளன என்பதையே மேற்படி விஜயம் கோடிட்டுக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக