ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகின் அதிவேக சுப்பர்சோனிக் ஏவுகணையை கடலுக்கடியில் பரிசோதிக்கிறது இந்தியா!

News Service
உலகின் அதிவேக சுப்பர்சோனிக் ஏவுகணையை கடலுக்கடியில் இந்தியா ஜனவரியில் பரிசோதிக்கவுள்ளது. எதிரியின் போர்க்கப்பல்களை மறைந்திருந்து தாக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை கடற்படையின் பலத்தை பலமடங்கு கூட்டும். ஒரு ஏவுகணையின் மதிப்பு ரூ.8-10 கோடி மதிப்புள்ளதாகும். இது 300 கிலோ வெடிபொருள்களை சுமந்து சென்று 290 கி.மீ.,ரம் தாக்கும் திறன் கொண்டவை. மேலும் இதன் வேகம்2.8 மாக் வேகம் ஆகும் 1 மாக் (ஒலி) வேகம் என்பது மணிக்கு 1195 கி.மீ.

  
சிறப்புகள்
* 290 கி.மீ.,க்கு அப்பால் இருக்கும் இலக்கை 6 நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் தாக்கும்.
* இந்த ஏவுகணை இந்தியா-ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பு.
* சீனாவின் "சன்பர்ன் சுப்பர்சோனிக்' ஏவுகணையை விட வேகமானது.
* அமெரிக்கா, பிரிட்டனின் "டொமாஹக்' ஏவுகணையை விட மூன்று மடங்கு வேகமானது.
* குறைவான உயரத்தில் பறக்கும் "சுப்பர்சோனிக்' உளவு விமானங்கள் கூட இதை கண்டறிவது கஷ்டம்.
* இலக்கை தாக்கும் போது கடலுக்கடியில் 10 மீட்டர் ஆழத்துக்கும் குறைவாக சென்று தாக்கும்.
தாக்கும் விதம்
1. "பான்டூன்' எனப்படும் நீர்மூழ்கி உதவியுடன் ஏவுகணை ஏவப்படும். ஆழத்துக்கு கொண்டு செல்லப்படும். 60 மீ ஆழத்திலிருந்து ஏவப்படும்.
2. கடலுக்கடியிலிருந்து நீர்மட்டத்தை 3 வினாடியில் கடந்து வெளியேறும்.
3. கடக்கும் தூரத்துக்கேற்ப உயரம் சென்று இலக்கை நோக்கி திரும்பும்.
4. திட எரிபொருள் "சூப்பர்சோனிக்' வேகத்துக்கும், திரவ எரிபொருள் ஏவுகணையின் இன்ஜின் வேகத்துக்கும் உதவுகிறது.
5. இலக்குக்கு சிறிது தூரத்துக்கு முன்னர் கடலுக்கடியில் சென்று தாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக