ஆரம்பபள்ளி குழந்தைகளை, கொடுமைப்படுத்திய படங்களை இணைய தளத்தில் வெளியிட்ட சீன ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின், சிஜியாங் மாகாணத்தின் வென்லிங் நகரை சேர்ந்தவர் யான்ஹாங், 20. ஆரம்ப பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றினார். தனது வகுப்பில் படிக்கும் சிறார்கள், சேட்டை செய்தால் கடுமையாக தண்டிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
காதை பிடித்து திருகுவது, அவர்கள் வாயை, டேப்பால் ஒட்டுவது போன்ற முறையில் தண்டனை கொடுத்தார். இந்த காட்சிகளை அவர் வீடியோவில் பதிவு செய்து, இணைய தளத்தில் வெளியிட்டார். இணையதளத்தில், இந்த காட்சிகளை பார்த்த பள்ளி நிர்வாகம் ஆசிரியை யான் ஹாங்கை பணிநீக்கம் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக