ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கௌஹாத்தியில் 19 வயது இளம்பெண்ணிடம் 20 இளைஞர்கள் பாலியல்


அசாம் மாநிலத்தின் கௌஹாத்தியில் 19 வயது இளம்பெண்ணிடம் 20 இளைஞர்கள் பாலியல் வன்முறையில்
ஈடுபட்ட சம்பவம், யூடியூப் இணையத்தளத்தில் வெளியாகி அனைத்துத் தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் வலுத்து வருகிறது.

குறித்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போது உடனடியாக காவற்துறையினருக்கு முறையிடப்பட்ட போதும் மிகதாமதமாகவே அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததாக குற்றம் சுமத்தப்படுகிறது. இது குறித்து அசாம் மாநில டிஜிபி ஜயந்த நாராயன் சௌத்ரி கருத்து தெரிவிக்கையில், போலீஸ் ஒன்றும் ஏடிஎம் அல்ல. கார்ட்டை போட்டவுடன் காசு வருவது போல், உடனடியாக அந்த இடத்துக்கு நாங்கள் வருவதற்கு என்றார்.

ஒருவரை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யும் போது அதற்கு லைட்பிடித்துக்கொண்டிருப்பதை (படம்பிடிப்பதை) நான் கடுமையாக கண்டிக்கிறேன் என்றார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

இந்த விவகாரம் தொடர்பில் அசாம் மாநில முதலமைச்சர் தருன் கோபியுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜி எஸ் சாலையில் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு நண்பருடன் 19 வயது இளம்பெண்   நடந்து சென்று கொண்டிருந்த போது, 20 இளைஞர்கள் சுற்றி வளைத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 ம திகதி நடந்த இந்த வன்கொடுமை சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாகத் தெரிகிறது.
      இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட 11 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் வலுத்து வரும் நிலையில், இது தேசிய அவமானம் ஆகும் என்றும் போலீசார் தங்கள் கடமையை மறந்து நின்றுகொண்டு இருந்திருக்கிறார்கள்  என்றதும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே இந்த சம்பவம் உணர்த்துவதாகவும், அந்த இளம்பெண் துடிதுடித்து 30 நிமிடம் போராடியது என்பது தேசிய அவமானம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா கரத் வேதனையுடன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக