ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இறுதிப் போரில் படையினர் பல தவறுகளைச் செய்தது உண்மை! நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கையில் இறுதிப் போரின்போது இலங்கை அரச படையினர் பல தவறுகளைப் புரிந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக நம்பகமாக தெரியவருகிறது.
அறிக்கை முப்படையினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது என்று நம்பகமான செய்தி மூலம் ஒன்று தெரிவித்துள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் படையினரால் தவறுகள் பல மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிக்கை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும் நிகழ்ந்த தவறுகள், குற்றங்கள் அனைத்துக்கும், அப்போது இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவும் அவருக்கு நெருக்கமான அதிகாரிகளுமே காரணமாக இருந்தார்கள் என்ற சாரப்பட அறிக்கையின் போக்கு இருப்பதாகவும் அறிய வந்துள்ளது.
தனது விசாரணையில் அடையாளம் காணப்பட்ட குற்றச்செயல்கள், தவறுகளுக்குக் காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தித் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் அறிக்கை ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
படையினர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை அறிக்கை முன்வைப்பதால், அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் சட்டச் சிக்கல்கள் குறித்து தற்போது அரச சட்ட நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
அறிக்கையால் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் சட்ட விளைவுகள் குறித்து அவர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைப்பார்கள். அதன் பின்னரே அறிக்கையை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதற்கான திகதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக