ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தயாநிதி இல்லத்தில் ரெயிடு – எஃப்.ஐ.ஆர். பதிவு! இதோ விபரம்!!



 முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் இல்லங்கள் மற்றும் அவருடன் தொடர்பு உடைய இடங்களில் இன்று (திங்கட்கிழமை) காலையிலிருந்து ரெயிடு செய்யத் தொடங்கியுள்ளது சி.பி.ஐ. இந்தச் செய்தி பதியப்படும் நேரத்தில் சி.பி.ஐ.யின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.
ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் தொடர்பாகவே தேடுதல் வேட்டை நடைபெறுவதாக தெரியவருகின்றது.

தயாரிதி மாறனுக்குச் சொந்தமான இல்லங்களில், சென்னை, ஹைதராபாத், புதுடில்லி ஆகிய நகரங்களில் உள்ள இல்லங்களை ஒரே நேரத்தில் சுற்றி வளைத்த சி.பி.ஐ. அதிகாரிகள், அங்கிருந்து யாரும் வெளியேற விடாதபடி செய்துள்ளனர். இதையடுத்து, மேற்படி இல்லங்களில் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர் அதிகாரிகள்.
நேற்றைய தினம், அதிக பரபரப்பின்றி சி.பி.ஐ. சில குற்ற முதல் அறிக்கைகளை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்திருந்தது. அதை சி.பி.ஐ. முடிந்தவரை ரகசியமாகவும் வைத்திருந்தது. தயாநிதி மாறன், கலாநிதி மாறன், டி.ஆனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷல் ஆகியோரின் பெயர்களில் எஃப்.ஐ.ஆர். பதிவாகியுள்ளன.
தயாரிதி மாறனின் இல்லங்கள் சோதனைக்கு உட்படும் அதே நேரத்தில், அப்போலோ குரூப்பைச் சேர்ந்த சுனிதா ரெட்டியின் இல்லமும் சி.பி.ஐ. ரெயிடுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. அங்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்னமும் (இந்திய நேரம் காலை 10 மணி) சோதனை வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சுனிதா ரெட்டியின் பெயர், சி.பி.ஐ.யால் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் இல்லை. அப்படியிருந்தும் எந்தப் பிரிவின்கீழ் சி.பி.ஐ. ரெயிடு நடைபெறுகின்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை. சுனிதா ரெட்டிக்கும், இந்த வழக்குக்கும் உள்ள தொடர்பு, இதில் சம்மந்தப்பட்டுள்ள ஏர்செல் நிறுவனத்தின் தலைவராக அவர் (2005ல்) இருந்திருக்கிறார் என்பதே!
பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான வருண் காந்தி, “தயாநிதி மாறன்மீது நீண்ட காலத்துக்கு முன்னரே எஃப்.ஐ.ஆர். பதிவாகியிருக்க வேண்டும். தாமதமாக தற்போதுதான் பதிவு செய்துள்ளார்கள். தாமதமாகச் செயற்பட்டாலும், இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் சி.பி.ஐ., “ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஏர்செல்-மேக்சிஸ் டீல் சம்மந்த பட்டுள்ளது. அதில் தயாநிதி மாறனுக்கும் தொடர்பு உள்ளது” என்று கூறியிருந்தது. ஆனால், அதன்பின் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாநிதி மாறனின் பெயர் லோ-புரொஃபைலில் அடக்கி வாசிக்கப்பட்டிருந்தது. இது பலவித ஊகங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியிருந்தது.
விறுவிறுப்பு.காம் இரு தினங்களுக்கு முன்னரே (8ம் தேதி) இப்படி ஒரு நடவடிக்கைக்கு சாத்தியம் உள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. “கனிமொழி வெளியே வர தயாநிதி உள்ளே போக வேண்டியிருக்கும். பரவாயில்லையா?” என்ற தலைப்பில் வெளியான அந்தச் செய்தியில் நாம் குறிப்பிட்டிருந்ததைப் பாருங்கள்:
10ம் தேதி (திங்கட்கிழமை) சி.பி.ஐ. ஏதோ அதிரடி செய்ய இருப்பதாக டில்லி வட்டாரங்களில் ஒரு கதை இருக்கிறது. அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சி.பி.ஐ.யை அடக்கி வாசிக்கும்படியான உத்தரவு போய்விட்டது என்பது பரபரப்பாக அடிபடும் மற்றொரு கதை.
இதற்குள் மூன்றாவதாக ஒரு கதையும் அடிபடுகிறது. “கனிமொழியை ஜாமீனில் விடலாம். ஆனால், அதைச் செய்வதற்குமுன் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு புள்ளி உள்ளே போக வேண்டியிருக்கும். பரவாயில்லையா?” என்று ஒரு மெசேஜ், டில்லியிலிருந்து டி.ஆர்.பாலு மூலமாக கோபாலபுரம் சென்றிருப்பதாகக் கூறப்படுவதே, அந்த மூன்றாவது கதை.
‘மற்றொரு புள்ளி’, தயாநிதி மாறன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தற்போது சி.பி.ஐ. மேற்கொண்டுள்ள அதிரடித் தேடுதல் நடவடிக்கை, அநேகமாக தயாநிதி மாறன் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட உள்ளார் என்பதையே காட்டுகிறது. அடுத்த சில தினங்களில் குற்றப் பத்திரிகை சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்படலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக