ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என கண்டறிய

இந்த தளத்திற்கு செல்ல - Voter list Search Engine
மனிதனாக பிறந்த ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை தேர்தலில் வாக்களிப்பது. தேர்தலில் வாக்களிக்க நம்முடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் ஓட்டு போட முடியாது. (என்னது! பெயர் இருந்தும் ஓட்டு போட முடியலையா அதுக்கு நான் பொறுப்பில்ல.. வாழ்க ஜனநாயகம்). ஆனால் நம்முடைய அரசு அதிகாரிகளை பற்றி தான் நமக்கு தெரியுமே ஒருத்தன் பேரு சரியா இருந்தா அவுங்க அப்பா பேரு மாறி இருக்கும் அல்லது இரண்டுமே சரியாக இருந்தா அவனுடைய போட்டோ மாறி இருக்கும் அல்லது 20 வயது இருக்கிறவனுக்கு 80 வயது போட்டுருப்பாங்க இதெயெல்லாம் மிஞ்சும் வகையில் உயிரோட இருக்கிறவன சாக கூட அடிச்சுடுவாங்க இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள்.
இதை எல்லாம் மீறி நம்முடைய விவரங்கள் சரியாக வந்தால் அந்த நீங்க அதிச்ட்ட சாலி தான். ஆனால் முன்பை போல் இல்லாமல்  இப்பொழுது இந்த பிழைகள் மிகவும் குறைந்து விட்டது. நன்றி - அரசு தேர்தல் துறை.

நம்முடைய வாக்காளர் பட்டியல் அடிக்கடி புதிப்பிக்க படும். இப்படி புதிப்பிக்கும் பொழுது ஏற்கனவே பட்டியலில் இருந்த பெயர்கள் விடுபட்டு போவது வாடிக்கையாக உள்ளது. இப்பொழுது புதிப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயர் மற்றும் நம் குடும்ப உறுப்பினர்களின் பெயர் போன்றவை இருக்கிறதா இல்லை விடுபட்டுள்ளதா என ஆன்லைனில் சுலபமாக கண்டறியும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதில் எப்படி உங்களுடைய பெயர் இருக்கிறதா என பரிசோதிக்க கீழே உள்ள வழிமுறையை பயன் படுத்தவும்.
  • இந்த தளத்திற்கு சென்றவுடன் கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • மேலே உங்களுடைய மாவட்டத்தையும் பிறகு தொகுதியையும் தேர்வு செய்து கொள்ளவும். (தமிழிலேயே இருப்பதால் விளக்கி கூற வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.)
  •  இதில் நான்கு வகைகளில் உங்களுடைய விவரங்களை தேடும் வசதியை கொடுத்து உள்ளனர். அதில் இரண்டாவது வசதியான வாக்காளரின் பெயர் மூலமாக தேடவும் என்ற வசதியை தேர்வு செய்து கொள்ளவும்.
  • அடுத்து கீழே உள்ள சமர்பிக்க என்ற பட்டனை அழுத்தவும். 
  • மேலே படத்தில் இருப்பதை போல தமிழில் உங்களுடைய பெயரையும், உங்களின் குடும்ப தலைவரின் பெயரையும் கொடுக்க வேண்டும்.
  • தமிழில் டைப் செய்ய அவர்கள் கொடுத்துள்ள தமிழ் கீபோர்ட் வசதியையும் பயன்படுத்தலாம் அல்லது Google Tamil Input வசதியை பயன்படுத்தி டைப் செய்யலாம். 
  • அடுத்து கீழே கொடுத்துள்ள சமர்பிக்க என்ற பட்டனை அழுத்தவும். பின்பு உங்களின் தொகுதியில் இதே விவரங்கள் பொருந்தும் நபர்களை உங்களுக்கு காட்டும். 

  • இதில் எது உங்களுடையதோ அந்த பெயரில் கிளிக் செய்து சென்றால் உங்கள் குடும்ப உறுப்பினர்களை (உடன் பிறந்தோர்) காட்டும். 
  • இது போன்று எத்தனை தடவை வேண்டுமானாலும் தேடி கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக