ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

“பதுங்கியிருந்த கடாபிமீது நான்தான் பாய்ந்து, அமுக்கினேன்” -பகீர் வாக்குமூலம்!



தண்ணீர் ஓடும் குளாய் ஒன்றுக்குள் பதுங்கியிருந்த கடாபியை வெளியே இழுத்து வந்த ஒருவரது பேட்டி, தற்போது கடாபியின் மரணத்தை (அல்லது கொலையை) அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இந்த பேட்டியைக் கையில் எடுத்துள்ளன.
குளாய்க்குள் பதுங்கியிருந்த கடாபியைக் கண்டுபிடித்த சிறிய போராளிக் குழுவில் தானும் ஒருவர் என்று இந்த நபர் தனது பேட்டியில் கூறியிருக்கிறார். அத்துடன் ஒம்ரான் ஷமான் என்று தனது பெயரையும் பேட்டியில் கூறியிருக்கிறார் 21 வயதான இவர்.

கடாபியின் மறைவிடத்தை முதலில் கண்டுபிடித்தவர்கள், மிசூர்டா நகரைச் சேர்ந்த ஒரு சிறிய போராளிக் குழுவினர்தான். சூர்ட் நகர முற்றுகையில் இவர்களும் மற்றைய போராளிகளுடன் இணைந்து நின்று யுத்தம் புரிந்துள்ளனர். முற்றுகையில் ஈடுபட்டுள்ள மற்றொரு படைப்பிரிவுக்கு உதவி செய்வதற்காக இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் சென்ற பாதையில், சற்று தொலைவில் நேட்டோ விமானக் குண்டுவீச்சு நடைபெற்றதை இவர்கள் கண்டனர். நேட்டோ விமானங்கள் குண்டுவீசிவிட்டுச் சென்றபின் இவர்கள் அந்த இடத்தை சென்றடைந்தனர். அதன்பின் என்ன நடந்தது?
இதோ, ஒம்ரான் ஷமான் வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவருக்கு கொடுத்த பேட்டியில் இருந்து ஒரு பகுதியைப் பாருங்கள்-
“நாங்கள் அந்த இடத்தை சென்றடைந்தபோது, சுமார் 15 பேர் இங்கும், அங்குமாக ஓடிக்கொண்டு இருந்தனர். இவர்களை நாங்கள் எங்கே நின்று பார்த்துக்கொண்டு இருந்தோம் தெரியுமா? கடாபி பதுங்கியிருந்த குளாய்க்கு மேலேதான் (போட்டோ பார்க்கவும்) நின்றிருந்தோம்.
கடாபி பதுங்கியிருந்த பைப் இதுதான்!
அந்த இடத்தில் ஓடிக்கொண்டு இருந்தவர்கள் கடாபி ஆதரவாளர்கள் என்பதைக் கண்டுகொண்டோம். உடனடியாக அவர்களைக் கைது செய்தோம். ஒரு ஓரமாக இருவர் பதுங்கியிருந்ததைக் கண்டோம். எனது சகா ஒருவர் உடனே ஓடிச்சென்று அந்த இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இப்போது நாங்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து நகர்ந்து வீதிக்கு வந்தபோது வேறு நான்கு பேர் மறைந்திருந்துவிட்டு ஓட முற்பட்டனர்.
எங்களைக் கண்டவுடன் அவர்கள் சரணடைந்தனர். ஒருவேளை நாங்கள் அவர்களையும் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று அவர்கள் பயந்திருக்க வேண்டும். “எங்களை ஒன்றும் செய்யாதீர்கள், கடாபி அதோ அந்த பைப்புக்குள் பதுங்கி இருக்கிறார். போய் அவரைப் பிடியுங்கள்” என்று சொன்னதே அவர்கள்தான்.
நான் அந்த பைப்புக்குள் எட்டிப் பார்த்தபோது, கடாபியின் புதர் போன்ற தலைமுடி தெரிந்தது.
உள்ளே இருப்பவர் கடாபி என்பதைப் புரிந்து கொண்டவுடன் நான் அவர்மீது பாய்ந்து ஆளை அமுக்கினேன். என்னுடன் வந்திருந்த மற்றைய இரு சகாக்களும் என்னைப் போலவே அவர்மீது பாய்ந்தார்கள். அவர் எங்களைத் தாக்கலாம் என்பதால்தான் அப்படிச் செய்தோம்.
ஆனால், யாரையும் தாக்கும் நிலையில் அவர் இல்லை. அவரது தலையிலும் மார்பிலும் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
நான் முதல் தடவையாக அவரைப் பார்த்தபோது, அவர் முழுமையாக உயிருடன் இருந்தார். அவரால் நடக்க முடிந்தது. பேச முடிந்தது. அவர் என்னிடம் “என்ன நடக்கின்றது இங்கே?” என்று கேட்டார். அநேகமாக அவர் பேசிய கடைசி வார்த்தை அதுதான் என்று நினைக்கின்றேன்”
“இந்தப் பேட்டி, லிபிய தற்கால அரசு சொல்வதுபோல கடாபி துப்பாக்கிச் சண்டையின் போது ஏற்பட்ட கிராஸ்-ஃபயரில் கொல்லப்படவில்லை என்பதைக் காட்டுகின்றது. அவர் போராளிகளின் கைகளில் அகப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இது போர்க் குற்றம்” என்கின்றது சர்வதேச மனித உரிமை அமைப்பு.
இருந்து பாருங்கள், இந்த விவகாரம் நிச்சயமாக மிக விரைவில் அமுக்கப்பட்டு விடும்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக