நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக கூறி, விஜயகாந்தை தமது பேச்சால் வெளுத்து வாங்கிய வடிவேலு, தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழ்நாட்டில் தான் இருக்கிறாரா...
என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளார். குறிப்பாக தேர்தல் முடிவுக்கு பின்னர் படவாய்ப்புகளும் ஏதும் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுந்தர்.சி படத்தில் வடிவேலு நடிக்கப்போவதாக தகவல் வெளியானது
. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளிவந்த வின்னர்,கிரி உள்ளிட்ட படங்கள் வடிவேலு காமெடிக்காவே மாபெரும் வெற்றி பெற்றன. இதனால் சுந்தர்.சி படம் மூலம் வடிவேலு மீண்டும் புத்துயிர் பெறப்போவதாக கோலிவுட்டில் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் வடிவேலு தன்னுடைய படத்தில் நடிக்கவே இல்லை, அதுவெறும் வதந்தி தான் என்று கூறியுள்ளார் சுந்தர்.சி.
இதனிடையே தேர்தலில் அநாகரிமாக பேசியதே வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் என்றும், இப்போதும் வடிவேலுவுக்கு நல்ல மார்க்கெட் இருப்பதாகவும்,
ஆனால் அவரை வைத்து படம் எடுக்க தான் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயங்குவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். வடிவேலுவுக்கு மீண்டும் எப்போது நல்லகாலம் வருமோ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக