ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 3 மாதத்திற்குள்ளேயே விரட்டியடித்தவர் ஜெ.-அன்பழகன்


இந்திய வரலாற்றில் மிகப்பெரிய குற்றாவாளியாகப் பேசப்பட்டவர் தான் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சிகளை 3 மாதத்திற்குள்ளேயே விரட்டி அடித்தவரும் அந்த அம்மையார் தான் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரான கே. என். நேருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது,
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய குற்றாவாளியாகப் பேசப்பட்டவர் தான் ஜெயலலிதா. டான்சி வழக்கில் அது என் கையெழுத்தே இல்லை என்று சாதித்தவர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு உண்மையை ஒப்புக் கொண்டார்.
தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலைத்தை ஆக்கிரமித்து சொகுசு பங்களா கட்டி அதை இன்னும் ஒப்படைககாதவர் ஜெயலலிதா.
கூட்டணிக் கட்சிகளை 3 மாதத்திற்குள் விரட்டி சர்வாதிகாரம் செய்யும் ஜெயலலிதாவுக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். கூட்டணிக் கட்சியினரால் அந்த அம்மையாரை எதிர்க்க முடியவில்லை, கூட்டணியும் நீடிக்கவில்லை. அந்த அம்மையாரின் மனப்பாண்மை தான் இதற்கெல்லாம் காரணம்.
இத்தகைய மனப்பாண்மை உள்ள ஜெயலலிதாவை எச்சரிக்கும் வகையில், அவர்களின் போக்கு தவறானது என்பதை உணர்த்தும் வகையில் மக்கள் இந்த இடைத்தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக