வளைகுடாவின் அரசியற் நிகழ்வினைக் காண … உலக நடப்பை நாமும் உற்சாகமாக நோக்கலாமே இக் கார்ட்டூன்கள் வாயிலாக.. தங்களின் உற்சாக வரவேற்பிற்குப் பின்பு 2ம் பாகம் வெளிவருகின்றது.
நேட்டோ படை உதவியுடன் லிபியாவில் கடாஃபியின் ஆட்சி கவிழ்ப்பு
கடாஃபி ஆட்சிக் கவிழ்ப்பின் நோக்கம் மனித உரிமையா அல்லது வளமிகு எண்ணெய்யா!?
அராபியர்களின் பணி வேகம்! (யாரங்கே வளைகுடா வாழ் தமிழர்கள் இவ்வளவு ஜோராக விசிலடிப்பது! இவர்களிலும் சிறுத்தைப்போல சீறி பணிபுரிவர்களும் உண்டு. என்ன... சதவிகிதம் தான் சற்றுக் குறைவு!)
அமெரிக்காவின் நிதிச்சிக்கலுக்கு காரணம் கற்பித்தல்
பங்குச் சந்தையின் நிலையற்றத்தன்மை!
பூகோளம் படும் பாடு
அமெரிக்காவின் நிதி நிலைமை
அணுசக்தி அபிவிருத்தியின் விளைவுகள்
டாலரினால் டான்ஸாடும் உலக பொருளாதாரம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று! சரி... ஆலயத்திற்க்காக சாவது நன்றோ!?
மனித உரிமைகள் உலகளவில் படும் பாடு!
உலகில் ஆட்சியாளர்களால் நிகழும் வன்கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களும் கண்டு காந்...தீயப் பார்வையில்!
சோமாலியாவின் வறுமை! (லிபியாவில் மக்களின் உரிமைகளுக்காக கிளர்ந்தெழுவதாகக் கூறிய நேட்டோ அமைப்பு சோமாலியர்களை மட்டும் போர்க்க்கால அடிப்படையில் ஏன் கண்டுக்கொள்ளவில்லை?!.... கனிமம் இல்லையேல் கவனம் இல்லைஎனும் உயரியக் கோட்பாடுடன் செயல்படும் வல்லரசுகளை நீங்கள் அறியாததா என்ன?!)
மனிதர்களின் மனதில் ஒரு வலுவான கருத்தாக்கத்தை பதியவைப்பதில் பேச்சின் / எழுத்தின் பங்கை விட, மிக எளிதான முறையிலான கார்ட்டூன்களின் பங்கு முதன்மையிடத்தினைப் பெற்றுவிடுகின்றது. இதனை பிரசுரித்த அரேப் நியூஸ் நாளிதழ் இதழிற்கும், கருத்தோவியம் வரைந்த ஓவியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக