இந்தியாவிலஇப்பவெல்லாம் இவனுங்க தொல்ல தாங்க முடியல. அட நம்ம காவி சாமியார் தொல்லை தான், முக்திய கொடுகிறேன், பக்திய கெடுக்கிறேன்னு, ஸ்ட்ரெயிட்ட சொர்கத்துக்கு கூட்டிகினு போயிட்றேன், மாலு வெட்டுனா போதும்ன்னு அட்டகாசம் பண்றானுங்க. ஏதோ ஒரு ஆசிரம வச்சு செட்டீல் ஆகி தொலையிரானுங்கன்னு பார்த்தா, இப்பயெல்லாம் ராமர் கோயில கட்றேன், ஊழல ஒழிக்கிறேன்ன்னு சாமியாருங்க
தான் முதல்ல கிளம்பிறானுங்க.ஏற்கனவே காந்தியவாதிகள் சேர்ந்து, ’இனிமே எவனவது ஊழல் பண்ண தூக்கில போடு, கைய வேட்டு, இல்ல கால வெட்டுன்னு’ கெளம்புனானுங்க. 30 நாட்களில் ஊழலை ஒழிப்போம்ன்னு லோக்பால் வேணும், கோபால் வேணும்ன்னு கத்தி, நெக்ஸ்ட் சங்குதான்னு நெலம வரும்போது அவசராவசரமா ’வெற்றி, வெற்றி, ஊழல் ஒழிஞ்சிடுச்சு, நாடு திருந்திடிச்சின்னு’ இந்த்தியா வெள்ளாவில வெளுத்துடச்சின்னு கல்லாகட்டுனானுங்க.
இன்னும் ஊழல ஒழிக்க ஏத்துன மெழுகுவத்தி அணையக்கூட இல்ல அதுக்குள்ள கறுப்பணத்த ஒழிக்க பாபா ராம் தேவ் உண்ணவிரதம் இருக்கபோறாராம். எவன் செத்தாலும் கவலப்படாத நம்ம பிரத்மரு, ’பாபா ராம் தேவ் உண்ணவிரதம் இருக்க வேணாமுன்னு’ உருக்குமா கேட்டுகிட்டாறாம்.என்னடா கலர்கலார் ரீல் சுத்துறீங்க.
இவியிங்க டீவில வந்து சம்பாதிக்க எங்க மக்கள் தான் கிடச்சாங்களா. பாவம் அவங்க, இப்பவே என் நண்பன் மெழுகுவர்த்தி வாங்கிட்டு சோக்மா நிக்கிறான், என்னடான்னு கேட்டா ’இல்லை இந்த சனிக்கிழம ரெஸ்ட் எடுக்கலாம்ன்னு நெனைச்சின், சரி விடு பீச்ச்ல ரெஸ்ட் எடுத்தகலாம்’ன்னு மனசு தேத்திகிட்டான்.என்ன கொடும இப்படி இந்திய இளைஞர்கள சனி ஞாயிறு கூட ஜனநாயக கடமியாற்றவிடாம பண்றானுங்க. இன்னொரு நண்பன் இந்த உண்ணவிரத்த்திற்கு ஆபிஸில ஒரு நாள் லீவு போட்டுட்டு போராட போகலாமான்னு யோசிக்கிறான்.. நல்ல பாருங்க் யோசிக்கிறான்.
ஏற்கனவே அண்ண அசரே தோச்சி வெளுத்த இந்தியாவா இப்ப ராம் தேவ் வேற வெளுத்து தொங்கவிடபோறாரு, இந்தியா தாங்குமா?. இப்படியெல்லாரும் சேர்ந்து இந்தியாவ வெளுத்து வெளுத்து நம்ம அப்துல் கலாம் ஐயர்வாள் சொன்னாது போல 2020ல இந்திய வல்லரசு ஆகிவிடுமா?நினைச்சாலே பயமா இருக்கு.
ஆகிவிடுமாவா? என்ன ஆகியாச்சு... ஏற்கன்வே தமிழ்நாடு ஒரு புரட்சி செஞ்சி இப்ப கேப் கூட விடாம இந்திய அளவுல புரட்சி பண்ணபோறார் ராம் தேவ் .பின்னால எல்ல டிவி கேமராவும் ரெடியாயிடிச்சி, இந்த ஐபிஎன்னும், என்ட்டிவியையும் நினைச்சாதான் பயமா இருக்கு இவனுங்க சும்மாவே ஆட்டம் ஆடுவானுங்க, இவனுங்க கால்ல சலங்கைய வேற கட்டிவிட்டுட்டா என்ன ஆவது ருத்தர தாண்டவம் தான்.
கைபுள்ள ராம் தேவ் ஜூன் 4ம் தேதி கிள்ம்ப்போறாரு இனி இந்தியாவுல எத்தன தல உருள போகுதோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக