ஊட்டி, ஏப்ரல் 4: நடிகர்கள் செய்யும் கீழ்த்தரமான பிரசாரங்களை பொதுமக்கள் ஏற்பதில்லை; எதிர்க்கிறார்கள், விஜயகாந்த் கொள்கைகளைப் பற்றிப் பேசாமல், பாட்டிலைப் பற்றியே பேசுகிறார் என்று ஊட்டியில் செய்தியாளரிடம் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இருப்பதைத் தேடித்தான் பார்க்க வேண்டும் என்றும், அப்படி ஒரு கட்சி இருப்பதாகவே கருதவில்லை என்றும் கூறினார்.இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், இந்தத் தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறினார் சுப்பிரமணிய சுவாமி.குறிப்பாக, சினிமா நடிகர்கள் செய்கின்ற கீழ்த்தரமான பிரசாரங்களை பொதுமக்கள் ஏற்பதில்லை, எதிர்க்கிறார்கள் என்றும், எனவே அவர்கள் அரசியல் பிரசாரம் செய்யாமல் இருப்பதே நல்லது என்றும் கூறினார். அதே சமயம் விஜயகாந்த் பற்றிக் குறிப்பிடும்போது, விஜயகாந்த் தன் கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், எதிர்பார்ப்புகள் என்பது பற்றி எல்லாம் பேசாமல், வெறுமனே பாட்டில்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார்.மேலும், வரும் 25 ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் மீதான இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கனிமொழி, ராசாத்தி அம்மாள் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன என்று கூறினார் சுப்பிரமணியம் சுவாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக