ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்களை நீங்கள் தோற்கடித்தாலும் உங்களை நாங்கள் மறக்க மாட்டோம் கருணாநிதி உருக்கம்


வேலூர்;"எங்களை தோற்கடியுங்கள்.நாங்கள் தோற்றாலும் உங்களை மறக்க மாட்டோம்'என வேலூர் பிரசார கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உருக்கமாக பேசினார்.
வேலூர் மாவட்டத்தில் 13 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூர் கோட்டை வெளி மைதானத்தில் நடந்தது.
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி பேசியதாவது;

முந்த நாள் அரசியலுக்கு வந்தவர்கள் எங்களை விமர்சனம் செய்கின்றனர்.75 ஆண்டு காலம் அரசியலில் இருந்து வந்தவன்.பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்தவன்.இந்த சமுதாயத்துக்கு இன்னமும் உழைத்துக்கொண்டுள்ளேன்.ஆனால் இவர்கள் இப்படி பேசலாமா?
கருணாநிதி தமிழகத்தை ஆளக்கூடாது என்கின்றனர்.அண்ணாதுரை சொன்னபடி, படி அரிசி போடவில்லை.கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போட்டான்.சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டான்.இவன் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால் நம்மால் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது என்று சிலர் நினைக்கின்றனர்.தமிழகத்தில் இலவச "டிவி'காஸ் அடுப்பு,"108'ஆம்புலன்ஸ் என பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.இவனை விட்டு வைத்தால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியாது என்பதால் இவனை அழிக்க நினைக்கின்றனர்.நான்,இந்த ஐந்தாண்டுகள் நல்லாட்சி தரவில்லையா?ஆறாவது முறையும் நல்லாட்சி தருவோம்.ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்.என்னை நள்ளிரவு 12 மணிக்கு கைது செய்தார்.12 ஆயிரம் சாலைப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார்.
நான் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை சிதைத்து விட்டார்.இத்தகைய ஆட்சியை தொடர வாக்களிக்கும்படி ஜெயலலிதா கேட்கின்றார்.இந்த ஆட்சி தொடர வேண்டுமா?இந்த ஆட்சி மீண்டும் வந்தால் நான் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் செய்ய முடியாமல் போகும்.ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சத்துணவில் முட்டை போட மாட்டார்.அதனால் மாணவர் முட்டை போடும் நிலைமை வரும்.இதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் ஜெயலலிதாவை ஆதரியுங்கள்.எங்களை தோற்கடியுங்கள்.நாங்கள் தோற்றாலும் உங்களை மறக்க மாட்டோம்.
தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக