ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிறந்தவுடன் பெண் குழந்தைகளைக் கொன்றுவிடச் சொன்னாரா சல்மா அன்சாரி?

குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரியின் மனைவி சல்மா பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமை பற்றிய ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் "பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத்  தடுக்க இயலாமல் சமுதாய சூழ்நிலை உள்ளது.

எனவே, இப்படியுள்ள சூழலில்  எனது கருத்து என்னவென்றால் பெண் குழந்தை பிறந்ததும் உடனே விஷம் கொடுத்து கொன்று விட வேண்டுமோ" என்று ஆதங்கத்துடன் பேசினார். ஆனால் இப்பேச்சு கருத்தரங்குக்கு வந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. சல்மா அன்சாரியின் பேச்சு நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


கடந்த ஆண்டு பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து  தீவிர விவாதம் எழுந்த போது, அந்த இட ஒதுக்கீடு எந்தப்  பயனும் தராது என்று சல்மா பேசியிருந்ததாக   சர்ச்சையானது. அதற்கு விளக்கமளித்த அவர் "பெண்கள் விழிப்புணர்வு அடையாமல் வெறும் இட ஒதுக்கீடு செய்வதால் அது எவ்விதப் பலனும் அளிக்காது" என்றே குறிப்பிட்டதாக விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக