ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடம்

உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடம்

உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடமொன்றை துபாயில் ஸ்தாபிப்பதற்கான திட்டம் கட்டிடக் கலைஞர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 420 மீற்றர் உயரமான இந்த 80 மாடிக் கட்டிடமானது நியூயோர்க்கைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் டேவிட் பிஷரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடத்தின் மாடிகளுக் கிடையில் சுழலும் இயந்திர சாதனங்கள் பல பொருத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மாடியையும் விரும்பிய திசைக்கு திருப்ப முடியும் என டேவிட் பிஷர் கூறுகிறார். இந்தச் சுழலும் மாடியிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பு அலகும் ஒரு சதுர அடிக்கு 3000 டொலர் வீதம், 4 மில்லியன் டொலரிலிருந்து 40 மில்லியன் டொலர் வரையான விலைக்கு விற்பனையாகவுள் ளது. மேற்படி சுழலும் மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது