ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மொபைல் எண்ணை மாற்றாமல் சர்வீஸை மாற்றும் திட்டம் தொடங்கிவிட்டது


மொபைல் எண்ணை மாற்றாமல், நமது சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த திட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 70 கோடி பேர் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சர்வீஸைத் தேர்ந்தெடுத்து விட்டால் அதிலேயேதான் தொடர வேண்டியுள்ளது
-அது பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும். தற்போது இதற்கு முடிவு கட்டியுள்ளது இந்திய தொலைத் தொடர்புத்துறை. எந்த மொபைல் போன் சர்வீஸ் பிடிக்காவிட்டாலும், நமது எண்ணை அப்படியே வைத்துக் கொண்டு சர்வீஸை மட்டும் மாற்றிக் கொள்ளும் போர்ட்டபிலிட்டி வசதி இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் இதை இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் லட்சக்கணக்கான ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் பலனடைய உள்ளனர்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்று. வாடிக்கையாளர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். மேலும் செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களது சர்வீஸை மேம்படுத்த உதவும். போட்டிகள் அதிகரிக்கும். இது தரமான சேவையை வாடிக்கையாளர்கள் அடைய உதவியாக இருக்கும்.
முதலில் இந்தத் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹரியானாவில் தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஏர்டெல், வோடோபோன், ஐடியா, ஏர்செல், எம்டிஎஸ், வீடியோகான், யூனினார் ஆகிய செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த வசதியை அளிக்கவுள்ளன.
அதேபோல சென்னை (பெருநகரம்) மாநகரிலும் எம்டிஎஸ் தவிர மேற்கண்ட மற்ற நிறுவனங்கள் இந்த சேவையில் இணைந்துள்ளன. எனவே இவற்றில் எந்த நிறுவனத்தின் சேவை பிடிக்காவிட்டாலும் மற்றவற்றின் சேவைக்கு எண்ணை மாற்றாமலேயே மாறிக் கொள்ளலாம்.
கர்நாடகத்தி்ல மேற்கண்ட நிறுவனங்களுடன் ஸ்பைஸ் நிறுவனத்தின் சேவையும் இடம் பெறும்.
சேவையை மாற்றுவது எப்படி?
கீழ்க்கண்டவற்றை பின்பற்றி நமது சேவையை மாற்றிக் கொள்ளலாம்.
- உங்களது செல்போன் எண்ணை 1900 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவியுங்கள்.
- உங்களுக்கு தற்போதைய சேவையாளர் ஒரு கோட் எண்ணைத் தருவார்.
- பின்னர் உரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதில் எந்த சர்வீஸை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களோ அந்த நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, உங்களுக்குத் தரப்பட்ட கோட் எண்ணைக் குறிப்பிட வேண்டும். அடுத்த 7 நாட்களில் உங்களது சர்வீஸ் மாற்றப்பட்டு விடும்.
- இந்த சேவையைப் பெறுதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம், வெறும் ரூ. 19 மட்டுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக