ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எகிப்தின் மக்கள் கிளர்ச்சி : 5000 கைதிகள் சிறையை உடைத்து ஓட்டம்(வீடியோ இணைப்பு)

சிறையை உடைத்து ஓட்டம்(வீடியோ இணைப்பு)



கெய்ரோ : துனிஷியாவில் வெடித்த புரட்சியை  அடுத்து 30 ஆண்டு காலமாய் எகிப்தை இரும்பு கரம் கொண்டு ஆண்டு வரும் ஹோஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து இறங்கி வர வலியுறுத்தி பொதுமக்கள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இச்சூழலில் கெய்ரோவிற்கு 130 கீ.மீ தொலைவில் தென் மேற்காய் அமைந்துள்ள பையூம் பிராந்தியத்தில் 5000 சிறைகைதிகள் சிறையை உடைத்து வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிறையை உடைத்து வெளியேறிய இச்சம்பவத்தில்  இராணுவ உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டும் இன்னொரு இராணுவ உயர் அதிகாரி கடத்தப்பட்டும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சனிக்கிழமை நிவ்யோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலையகத்துக்கு முன்பாக எகிப்தியர்கள் தம் நாட்டில் நடைபெரும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான சுலோகங்களுடன் அணிதிரண்டனர். சனிக்கிழமை இரவு கெய்ரோவில் அமைந்துள்ள ஆளும் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சித் தலைமையத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது முறையாக தீ வைத்துள்ளனர்.
மேலும் பிரமிடுகளையும் அரசின் முக்கிய இடங்களையும் பாதுகாப்பதற்காக யுத்தத்தாங்கிகளும் இராணுவ அதிகாரிகளும் நகரத் தெருக்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது வரை நடைபெற்று வரும் கலவரங்களில் 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதோடு 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையடிப்படையில் முபாரக் இது வரை பதவியை விட்டு விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தின் பிரதான எதிர்க்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான அழைப்பை விடுத்துள்ளது. மேலும் எகிப்தில் பிறந்த இஸ்லாமிய மத தலைவர் யூசுப் அல் கர்ளாவியும் முபாரக் நாட்டை விட்டு வெளியேற வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முபாரக்கின் ஆட்சிக்கெதிராக கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சர்வாதிகார ஆட்சி பதவி விலகவேண்டும் என விரும்புவதாக கோஷங்களை எழுப்பினர். 'முபாரக்கே வெளியேறு!' 'ரொட்டி,விடுதலை,கண்ணியம்’, 'நாங்கள் துனீசியாவை பின்பற்றுவோம்' என முழக்கமிட்டனர். அக்பார் அல் அரப் என்ற இணையதளம், ஹுஸ்னி முபாரக்கிற்கு அடுத்ததாக பதவி வகிக்க காத்திருக்கும் அவரது மகன் ஜமால் முபாரக் தனது மனைவி மற்றும் மகளுடன் நாட்டைவிட்டு வெளியேறி பிரிட்டனுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக