சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து வினோத ஆர்ப்பாட்டம் (27.03.2012) நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அரசு வழங்கிய பேன், கிரைண்டர், மிக்ஸிக்கு மாலை அணிவித்து, மணி அடித்து, சாம்பிராணி புகை போட்டு பெண்கள் ஒப்பாரி வைத்து நடு வீதியில் அழுதனர்.
மின்சாரம் இல்லையென்று தாரை தப்பட்டை அடித்து எலக்ரானிக் பொருட்களை பெண்கள் மார் அடித்து அழுது
கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்றனர். மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கவேண்டும் என கோசம் எழுப்பினர்.
போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் கெஞ்ச, எங்களால் உங்களுக்கு பிரச்சனை வரக்கூடாது என்று சொன்னபடி போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றோம் என்று தெரிவித்தார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ராமச்சந்திரன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக