9 நியூஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கைல் டையர். இவர் நாயை மீட்டது குறித்து தீயணைப்பு வீரரிடம் நேரடி ஒளிபரப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். மீட்கப்பட்ட நாய் மேக்ஸ் மற்றும் மேக்ஸின் உரிமையாளர் உடனிருந்தனர்.
பேட்டி எடுத்ததோடு சும்மா இருந்திருக்கலாம். அந்த நாயை அவர் தடவிக் கொடுத்தார். அப்போதும் அவர் பேசிக் கொண்டிருந்தார். தன்னைத்தான் திட்டுகிறார் என்று நினைத்ததோ என்னவோ அப்படியே பாய்ந்து முகத்தில் கடித்து விட்டது. உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பபட்டது.
அவர் நலமுடன் இருக்கிறார். முகத்தில் ஏற்பட்ட காயத்தினால் அவரால் இப்போது பேச முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக