ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

‘பேரைக் கொடுத்துக்க வேணாமுங்க... ஊரைக் காப்பாத்திக்க பாருங்க...’’ ஊராட்சித் தலைவர்களுக்கு கோவணாண்டி உருக்கமான வேண்டுகோள்!



‘இந்தியா இன்னும் கிராமத்துலதான் வாழுதுÕனு தேசப்பிதா மகாத்மா காந்தி பெருமையோட குறிப்பிட்டு, தன் வாழ்நாள் முழுக்க பேசிக்கிட்டிருந்த நம்ம நாட்டு கிராமங்கள ஆள்றதுக்காக, இன்னிக்கு ஆர்ப்பாட்டமா ஜெயிச்சு வந்திருக்கற அத்தனை ஊராட்சித் தலைவ-ருங்--களுக்கும், ஒங்க பங்காளி கோவணாண்டி பெருசா ஒரு வணக்கம் போட்டுக்கறான்!
‘ஏதோ போட்டி போட்டோம்... ஜனங்க ஓட்டுப் போட்டாங்க... ஜெயிச்சுட்டோம்! அடுத்த அஞ்சி வருஷத்துல... ஆளுக்கொரு டாடா சுமோ காரை வாங்கிடணும்... நாலு இடத்துல நிலத்தை வளைச்சுப் போட்டுடணும்’னு ஒங்க முன்னோருங்க போல நீங்கள்லாம் யோசிக்க மாட்டீங்கனு நம்பி, மக்களுக்கு நல்லது செய்றதுக்காக ஒங்களையெல்லாம் நெசமாவே யோசிக்க வைக்கலாம்கிற நப்பாசையில... இந்தக் கடுதாசியை எழுதறேன்.
தேர்தல்ல ஓட்டு வாங்கி எம்.பி., எம்.எல்.ஏ&னு டெல்லியிலயும், சென்னையிலயுமே செட்டில் ஆகிடுவாங்க. ஆனா, உங்க கதை அப்பிடியில்ல, விடிஞ்சா... பொழுது போனா.... ஓட்டுப் போட்டவங்க முகத்துலதான் முழிப்பீங்க.
கொஞ்சமாச்சும் நல்ல மனசு இருந்தா, அவங்க முகத்தையெல்லாம் பார்க்கறப்ப ஒங்களுக்கு உறுத்தும். அதுக்காகவாவது நல்ல திட்டங்களா போட்டு, நீங்க பொறந்து, வளர்ந்த... ஒங்க மாமன், மச்சான் வாழற... ஒங்ககூடவே படிச்சு வளர்ந்த தோழனுங்க வாழற... நீங்க காலம் பூரா நேசிக்கற... கிராமத்தை மேம்படுத்துங்க.
‘அட, நாம சாதாரண பிரசிடெண்ட்தானே. இந்தக் கோவணாண்டி என்னவோ நம்மள எம்.பி., எம்.எல்.ஏ. அளவுக்கு அதிகாரம் படைச்ச ஆளு மாதிரியில்ல சொல்லிக்கிட்டிருக்கான். இவனுக்கு என்ன கிறுக்கு புடிச்சுப் போச்சோ...?’னு அசால்ட்டா இருந்துடாதீங்க. உங்களுக்கு அசுர பலத்தை, யானை பலத்தை கொடுத்திருக்கு பஞ்சாயத்து ராஜ் சட்டம்னு சொல்றாரு எங்கூரு இங்கிலிபீஸு வாத்தியாரு.
Ôயானையோட பலம் அதுக்குத் தெரியாது. அதனாலதான், ஒரு பொடிப் பையன்கூட, தெரு தெருவா பிச்சை எடுக்க வெச்சுடறான் யானையை. பலம் தெரிஞ்சு ஒரு பிளிறு பிளிறினாப் போதும்... யாரும் கிட்ட நெருங்க மாட்டாங்க. அப்படித்தான் கிராம பஞ்சாயத்தும். அதுல ஒரு தீர்மானம் நிறைவேத்திட்டா, நம்ம ஜனாதிபதியாலகூட அதை மாத்த முடியாது. புதுசா வரப்போற நிலம் கையகப்படுத்துதல் சட்டம்கூட, கிராம பஞ்சாயத்து ஒப்புதல் கொடுக்கலைனா... எந்தக் கொம்பனாலயும் நிலத்த கையகப்படுத்த முடியாதுனுதான் சொல்லுதுÕ அப்படினு வெவரம் சொல்லுறாரு இங்கிலிபீஸு வாத்தியாரு. அதனால யாருக்கும் சலாம் போடாம... கையேந்தாம... மக்கள்தான் நம்மளுக்கு எஜமான்கிறத மனசுல ஏத்திக்கிட்டு, ஒங்க வேலை வெட்டிகளை சிவனேனு பாருங்க. அதுக்குப் பிறகு, ஊருக்குள்ள ஒங்களுக்கு கோயிலே கட்டுவாங்க.
Ôஒங்க ஊருல தொழில் தொடங்கப் போறோம்; ஊருல பத்து பேருக்கு வேலை கொடுக்கப் போறோம்; அதுக்குப் பிறகு ஒங்க ஊரோட பேரு உலக வரைபடத்துல இடம் பிடிச்சுடும்... இப்படி கலர்கலரா அளந்துவிட்டு, ஒங்க ஊருல இருக்கற நிலத்தையெல்லாம் கூறு போடறதுக்காக கார்ப்ரேட் கம்பெனிக்காரங்க பல பேரு வருவாங்க. கூடவே, அவங்களுக்கு ஏவல் செய்றதுக்காக உள்ளூரு அதிகாரிங்களும் கைகட்டிக்கிட்டு வந்து, Ôநமக்கும் நாலு காசு கமிஷனா கிடைக்கும்Õனு ஒங்க காதை கடிப்பாங்க. அதுக்கெல்லாம் மயங்கி, ஒங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு துரோகம் நினைச்சுடாதீங்க. 
நிஜத்துல ஒங்க ஊரோட நிலத்துக்குண்டான மதிப்பு எத்தனையோ கோடியா இருக்கும். ஆனா, சில லட்சங்கள தூக்கி வீசிட்டு, கம்பெனிக்காரன் மொத்தத்தையும் சுருட்டிக்கிட்டு போயிடுவான். உள்ளூர்க்காரனோட உரிமைக்கு உலை வைக்காம, அவனோட ஜீவாதார சொத்துக்கு பாதகம் வந்துடாம பாத்துக்கிட வேண்டிய கடமை ஒங்களுக்கு இருக்கு.
அடுத்தவன் வந்து ஒங்க ஊருல கம்பெனி ஆரம்பிச்சா... ஒங்க வாழ்க்கை யெல்லாம் வளமாகிடும்னு சொல்றது சுத்த ஹம்பக். சொல்லப்போனா... ஒங்க வாழ்க்கையெல்லாம் ஒளியிழந்து போகும்கிறதுதான் உண்மை. இதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா... ஏற்கெனவே கம்பெனிகள் ஆரம்பிச்சுருக்கற ஊரு பக்கம் ஒரு தடவ எட்டிப் பார்த்துட்டு வாங்க.... அப்ப புரியும் ஒளி வீசுமா... ஒழிஞ்சு போகுமாங்கறது.
அடுத்தவன் கம்பெனி ஆரம்பிக்கறத விட்டுத்தள்ளுங்க. வாய்ப்பு இருக்கறவங்க... காற்றாலை, சூரியசக்தினு ஒவ்வொரு கிராமத்துலயும் மின்சாரத்தை சுயமாவே தயாரிக்கப் பாருங்க. விவசாயக் குழுக்கள ஏற்படுத்தி பயிற்சி, ஆலோசனை, விற்பனைனு உதவி செய்யுங்க. நீராதாரங்களைப் பெருக்கி, கிராமத்தை தன்னிறைவு அடையச் செய்யுங்க. இதுக்கு உதாரணமா நம்ம மாநிலத்துலயே நிறைய கிராமங்கள் இருக்குதே... அதையெல்லாம் பார்வையிட்டு, தெம்பா களத்துல இறங்குங்க. 
ஒருவேளை நிலத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் வந்தா... ஒங்க நிலத்துல வரப்போற கம்பெனி எது... அது தயாரிக்கப் போற பொருள் எது... அதைவெச்சு அந்த கம்பெனி சம்பாதிக்கப் போறது எவ்வளவு... இப்படி பல கேள்விகள கேட்டு, எல்லாத்துக்கும் விடையைத் தேடிக் கண்டுபிடிச்சு, அதை வெச்சே கணக்குப் போட்டு ஒங்க நிலத்துக்கு ஒரு தொகையை நீங்களே நிர்ணயம் பண்ணுங்க. அதுக்கு சரிப்பட்டு வந்தா, நிலத்தைக் கொடுங்க. இல்லாட்டி, ஊரைக் கூட்டி தீர்மானம் போட்டு, வந்தவன விரட்டி அடிங்க.
அப்புறம் தலைவர்களே... கிராமத்துல ஏகப்பட்ட பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாம கெடக்குது. Ôபால் வரும்... தேன் வரும்னு சொன்னதெல்லாம் ஜோஸியாமா போச்சுதுÕனு வைரமுத்து பாடுனது கணக்காதான் நம்ம ஊருங்க இருக்குது. சுதந்திரம் வாங்கி 
65 வருஷமாகியும், பல ஊருக்கு சுடுகாட்டுக்கு வழி இல்லை; பள்ளிக்கூடங்களுக்கு கூரை இல்ல; பொம்பளப் புள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடத்துலகூட கக்கூஸ் இல்ல... இதையெல்லாம், உடனடி தேவைகளா நெனச்சு சரி செய்யுங்க. 
இதுநாள் வரைக்கும் நீங்க அம்மா கட்சி... அய்யா கட்சி... அண்ணி கட்சினு ஏதோ ஒரு கட்சி மூலமா காலத்தை ஓட்டியிருக்கலாம். ஆனா, இனிமேற்கொண்டு, ‘நான் மக்கள் கட்சி’னு வெளியில சொல்லிக்காம, மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டாவது ஆக வேண்டிய வேலைகளப் பாருங்க.
கிராமத்துல ஆத்து நீரும் கெட்டு போச்சு... ஊத்து நீரும் கெட்டு போச்சு... நல்ல குடிதண்ணி அவசியம்கிறத உணர்ந்து, அதுக்குண்டான நடவடிக்கைகள எடுங்க. இப்படி தண்ணி கெட்டுப் போனதுக்கு காரணமே மணல் கொள்ளைதான். இதுக்கு எதிரா ஒங்களாலதான் அஸ்திரத்தைத் தூக்க முடியும். ஊரைக் கூட்டி ஒரு தீர்மானத்தைப் போட்டு, மணல் அள்ளுறதுக்கு தடை போடுங்க.
இன்னும் எத்தனையோ சங்கதிங்க இருக்கு ஒங்ககிட்ட பேசறதுக்கு. ஆனா, அத்தனையையும் இப்பவே எழுதிப்புட்டா... ஒங்களுக்கும் சலிப்புத் தட்டிப்போயிடும். அதனால மத்ததையெல்லாம் பிறகு பாத்துக்கலாம்.
நாளைக்கு நம்ம சந்ததிங்க நல்லபடியா ஊருக்குள்ள வாழணும்னா... இப்ப நான் சொல்லியிருக்கறதையெல்லாம் நல்லா மனசுல ஏத்திக்கிட்டு, காந்தி வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து செயல்படுங்க. அப்படியில்லாம நீங்களும் காந்தி நோட்டுக்கு ஆசைப்பட்டா... ஊருக்கே சமாதிதான். 
அப்பறம் அந்த ஆண்டவனாலகூட காப்பாத்த முடியாது... ஆமாஞ்சொல்லிப்-புட்டேன்!
இப்படிக்கு,
கோவணாண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக