
கல்லை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தான் கற்கால மனிதன். கை விரல்களால் கணினியில் உலகைக் கொண்டுவந்து வாழ்கின்றான். இக்கால மனிதன். இந்தவளர்ச்சியை என்னவென்று சொல்வது? நாளைய மனிதன் வளர்ச்சியை நினைத்தாலே பிரமிப்பு ஏற்படுகிறது.
இந்த அளவிற்கு மனிதன் வளர்ந்துவிட்டதை நினைத்து நாம் ஒருபுறம் பெருமிதம் அடைந்தாலும், மறுபுறம் மனிதன் தன் நிலையில் தடம்புரள்கின்றானோ என அச்சம் கொள்ளவும் வேண்டியுள்ளது.
இன்றைய நிலை
இன்றைய மனிதன் வாழ்க்கை எப்படி உள்ளது? நிலை தடுமாறி, சிந்தனை தடுமாறி, தடம் புரண்டு சுயநலம் மட்டுமே மேலோங்கி, பணம் சேர்ப்பது மட்டுமே குறிக்கோளாகி… வஞ்சகம் போட்டி பொறாமை, தீவிரவாதம், அழிவு இவைகளை முதன்மைப்படுத்தி… கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டுவெடிப்பு, மனித அழிவுகள் மேலோங்கி வாழ்கின்றன.
இதையா இறைவன் விரும்புகின்றான்? மனிதன் நிலை ஏன் இப்படி மாறிவிட்டது? உலகை சொர்க்க பூமியாக மாற்றிவிட்ட மனிதன் அந்த பூமியில் மனிதப் பண்பை இழந்து நரக வாழ்க்கை வாழத் தொடங்கி விட்டானே! இதுதான் வாழ்வியல் தத்துவமா? இறைவன் இதைத்தான் கூறினானா? இதை நாம் என்னிடல் வேண்டாமா?
அந்த வகையில் மானுடம் செம்மையுற, மனித நேயம் தழைக்கத் தமிழில் தோன்றிய நீதி இலக்கியம் திருக்குறளில், இப்பூவுலகில் மகத்தான மாற்றம் விளைவித்த இறைவசனம் கொண்ட மாபெரும் நூலான திருக்குர்ஆன் கூறும் வாழ்வியல் கருத்துக்கள் மிளிர்வதைக் கண்டு, அதனை சமூகத்திற்கு எடுத்துரைப்பது நம் கடமையெனக் கொண்டு ஒரு சில கருத்துக்களை இங்கு நாம் பதிவு செய்கின்றோம்.
இன்றைய சமூகத்திற்கு எது தேவை என உணர்ந்து அத்தேவைக்கு எவை எவை இருத்தல் வேண்டும் என்பதை அறிந்து அவை திருக்குறளிலும், திருக்குர்ஆனிலும் எங்கே உள்ளன என்பதைக் கண்டு கோர்வையாக்கி, இந்நூல்களில் ஆழ்ந்திருக்கும் வாழ்வியல் நெறித்தத்துவங்களை எடுத்து இயம்புவதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழருவி மு.க. அன்வர் பாட்சா,
தமிழாசிரியர். SBOA மேனிலைப் பள்ளி. கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக