
தமிழகத்தில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது இல்லை என்று இலங்கை அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்களின் மீது அடிக்கடி இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் தொடர்த் தாக்குதலுக்கு இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத் தீவு இந்தியாவுக்கு சொந்தமானது இல்லை. மேலும் கச்சத்தீவு, இலங்கைக் கடல் எல்லைக்குள் இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவே ஒப்புக் கொண்டுள்ளார் என இலங்கை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத் தீவில் நடைபெறும் அந்தோனியர் தேவாலயத் திருவிழா மற்றும் இந்திய மீனவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை காய வைப்பதற்காக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர மீன் பிடிக்க அனுமதி கிடையாது என்று இலங்கை அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து கடந்த 1974 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக