ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கருணை மனுக்கள் 5 வருடங்களின் பிறகே ஜனாதிபதி அலுவலகத்தைச் சென்றடைந்தன

முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைகளை குறைக்க வேண்டி 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் ஜனாதிபதியைச் சென்றடைய 5 வருடங்கள் எடுத்திருக்கின்றன என்பதை ஜனாதிபதி அலுவலக ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ்நாடு ஆளுநராக இருந்த திருமதி. பாத்திமா பீபி அவர்களால் இரண்டாவது தடவையாகவும் மேற்படி மூவரினதும் கருணை மனுக்கள் ஏப்ரல் 25ம் திகதி 2000ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டதையடுத்து 26ம் திகதி ஏப்ரல் மாதம் 2000ம் ஆண்டு ஜனாதிபதிக்கான கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன.
இவை ஜனாதிபதி அலுவலகத்திடம் யூன் மாதம் 22ம் திகதி 2005ம் ஆண்டே கையளிக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மை இப்போது வெளிப்பட்டிருக்கிறது.
இருந்தும் 11 வருடங்கள் நான்கு மாதங்கள் கழித்து இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 11ம்திகதி ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.
உண்மையிலேயே இது இந்திய அரசியல் சாசனத்தின் 21வது அதிகாரப் பிரிவை மீறுவதாக இருக்கிறது என்றும் இந்த அதிகாரப்பிரிவின் கீழ் ஒரு மனு விசாரணைக்கு வந்து இரண்டு வருடங்களிற்குள் அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும் கோரியே தற்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஜனாதிபதி செயலகமான ராஸ்திராதி பவனால் டிசம்பர் 23ம் திகதி 2010ம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்ட ஆவணத்தின் பிரகாரம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மனுக்கள் கிடைக்கப்பெற்ற திகதி யூன் மாதம் 22ம் திகதி 2005ம் ஆண்டாக இருக்கின்றபடியால் இது இந்திய அரசியல் சாசனத்தின் 21வது பிரிவிற்கு விரோதமான நிரூபிக்கக்கூடிய வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.
அத்தோடு இந்தியப் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய காஸ்மீர் தீவிரவாதிகளில் உயிரோடு பிடிபட்ட அப்சல் குருவின் மரணதண்டனை விவகாரத்தையொட்டியே இவர்கள் மீதான மரணதண்டனை விடயமும் ஜனாதிபதிக்குச் சென்றுள்ளதையும், அவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதையும் தற்போது கிடைக்கப்பெறும் தகவல் அறுதியாக உறுதி செய்கின்றது.
2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி இந்தியப் பாராளுமன்றத்தின் மீது பாகிஸ்தானிய ஆதரவு தீவிரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர். இத் தாக்குதலில் உயிரோடு கைது செய்யப்பட்ட அப்சல் குரு என அழைக்கப்படும் முகமட் அப்சலிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அதன் மீதான கருணை மனுக்கள் பல கட்டங்களில் நிராகரிகப்பட்ட நிலையில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி ஜனாதிபதியாலும் இந்த மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 11, 2011ல் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரது மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
ஜனாதிபதியின் பார்வைக்கான 28 கருணை மனுக்களில் இவை இரண்டுமே நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் மைய ஆட்சி அலகான பாராளுமன்றத்தைக் தாக்கிய அப்சல் குருவின் மரண தண்டனை நிறைவேற்றப்படுமானால், அதேபோல முன்னாள் பிரதமராக இருந்த, இந்திய வம்சாவளி ஆட்சியின் அலகான ராஜீவின் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே தர்மமாக, அழுத்தமாக பிரயோகிக்கப்பட்டே இந்தக் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
குறிப்பாக அப்சல் மொகமட் ஒரு பாகிஸ்தானியத் தீவிரவாதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு முன்னதாக இவர்களுடைய தீர்ப்பும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஒரு நியாயமற்ற நிலைப்பாடே இவர்களது கருணை மனு நிராகரிப்பு என்பதை அப்சல் மொகமட் மற்றும் இந்த மூவரினதும் மனு நிராகரிப்புக்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
இருந்த போதும், ராஜீவ் கொலையில் கொலையாளிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட சிவராசன், சுபா உள்ளிட்ட ஐவர், முதல் முக்கிய குற்றவாளிகளான விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் உயிரோடு இல்லையென்பதை இந்தியாவின் நீதித்துறை உறுதி செய்துள்ளது. அவ்வாறாயின் இவர்கள் மூவரும் இரண்டாம் நிலைக் குற்றவாளிகள்.
அதற்கும் மேலாக விடுதலைப்புலிகளே தற்போது வடக்குக் கிழக்கில் இல்லை என்பதை உறுதி செய்து அதன் ஒருபடியாக இந்தியா தனது துணைத் தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து அதனை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித சிரமுமின்றி நடத்தி வருகிறது. இந்த இரண்டு விவகாரங்களும் தற்போதைய வழக்கின் முக்கிய விவாதப் பொருட்களாகலாம்.
இவ்வாறாக ராஜீவ் காந்தியின் கொலையின் பிரதான குற்றவாளிகள் எனக் கூறப்பட்டோர் தண்டனையை அனுபவித்த பிற்பாடும் தங்களிற்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமல்லை எனக் கூறி வரும் இம் மூவரின் கருணை மனுக்களை இழுத்தடித்தும், இவர்களின் வழக்கை மீள் விசாரணைக்கு எடுக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுக்காமலும் இந்திய அரசு செயற்படுவதற்கான உண்மையான காரணத்தை தற்போது தொடுத்துள்ள வழக்கு வெளிக்கொணரும் என்றே நம்பப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக