ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மீண்டுமொரு நிர்வாண சர்ச்சை :: ஊழலுக்கெதிராக பொது இடத்தில் நிர்வாண நடனம்

மத்திய அரசு ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் பொது இடத்தில் நிர்வாணமாக நடனமாடப் போவதாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி சலினா வாலி கான் தெரிவி்த்துள்ளார். சலினா வாலி கான் (23). ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மாடல் சாதிக் கான் என்பவரை இந்த ஆண்டு தான் மணந்தார்.
திருமணத்திற்குப் பிறகு தான் அர்ஜுனுக்கு சாதிக் கானுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது சலினாவுக்கு தெரிய வந்ததாம்
. இதையடுத்து கணவனும், மனைவியும் பிரிந்து வாழத் தொடங்கினர். இந்நிலையில் ஊழலுக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னாவுக்கு ஆதரவாக தானும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் சலினா.
இந் நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில்,
நானும் ஊழலால் பாதிக்கப்பட்டவள் தான். அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது. ரேஷன் கார்டு வாங்க நான் ரூ. 500 லஞ்சமாகக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம், ஊழல். எனவே, ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றாவிட்டால் நான் பொது இடத்தில் நிர்வாணமாக நடனம் ஆடுவேன்.
(நிறைவேற்றாமலிருந்தால் நல்லதென்று நீங்கள் நினைப்பது கேட்கிறது) சிலரைப் போன்று பெயருக்காகவோ, பிரபலமாகவோ நான் இவ்வாறு கூறவில்லை. அன்னா நேர்மையானவர். அவர் என்ன அவருக்காகவா உண்ணாவிரதம் இருக்கிறார். இல்லையே, அதனால் தான் அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. சாதி, மத, வேறுபாடுகளைத் தாண்டி பெரும்பாலானோர் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக