ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்பா, அம்மாவிற்குப் பிறகு நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான்



அல்டிமேட் ஸ்டாரான அஜித் குமார், தமிழகத்தின் பிரபல வார இதழிற்கு அளித்துள்ள பேட்டியில், என் அப்பா, அம்மாவிற்குப் பிறகு நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அப்பேட்டியிலிருந்து சுவாரசியமான தகவல்களை இங்கே எடுத்துத் தருகிறோம்.

உங்க படம் பத்தி ஏன் பேட்டி எதும் தரமேட்டேங்கறீங்க..?

என் படத்தை புரமோட் பண்ணிநான் எதுவும் பேசமாட்டேன். நல்லா இருந்தா மக்கள் பார்க்கட்டும், யாரையும் நான் ஏமாத்த விரும்பல. அதனால்தான் நான் பேட்டி தருவதில்லை

மங்காத்தா படத்திற்கு வந்தது எப்படி?

ஜி படத்தில் வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து நடித்ததிலிருந்தே எங்களுக்குள் நல்ல நட்புறவு இருந்து வந்தது. வாலி மாதிரி ஒரு நெகட்டிவ் ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லுங்கன்னேன். ஒருநாள் வெங்கட் பிரபு கிளவுட்நைன் தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் பண்ணப் போறதா கேள்விப்பட்டு, அவரிடம் என்ன கதைன்னு கேட்டேன்.

அஞ்சு பேரோட கதை. எல்லாருமே கெட்டவங்க.. அதுல ஒருத்தன் மட்டும் ரொம்ப ரொம்ப கெட்டவன்னு மங்காத்தா கதையை சொன்னார். ரொம்ப பிடிச்சிருந்தது. நானே நடிக்கறேன்னு சொல்லிட்டேன்.

இப்படத்தில் உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்க?

விநாயக் மாதவன் கேரக்டர்ல வரேன். ரொம்ப ரொம்ப கெட்டவனா வரேன். இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும்.

சூப்பர் ஸ்டார் ரஜினியும் நீங்களும் நண்பர்களாச்சே? அவர் உடல் நலமில்லாமல் இருக்கும் போது பேசினீர்களா?

கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான். அவர்கிட்ட என்ன பேசினேன்னு வெளில சொல்றது நாகரீகமா இருக்காது. ரஜினி சார் எப்போதும் சிரிச்சுகிட்டே இருக்கணும்ங்கறதுதான் என்னோட விருப்பம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக