ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அம்மமா தயாரித்த கவர்னர் உரை

கவர்னர் உரையில் அறிவிப்பு: அண்ணா பிறந்தநாளில் அமல் பெண்களுக்கு மின்விசிறி மிக்சி-கிரைண்டர்; கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படும்
கவர்னர் உரையில் அறிவிப்பு:
 
 அண்ணா பிறந்தநாளில் அமல்
 
 பெண்களுக்கு மின்விசிறி
 
 மிக்சி-கிரைண்டர்;
 
 கேபிள்  டி.வி.  அரசுடமை  ஆக்கப்படும்
தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்ற பின் சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. சட்டசபையில் உரையாற்ற கவர்னர் பர்னாலா சரியாக 9.55 மணிக்கு வந்தார். அவரை சபாநாயகர் ஜெயக்குமார், வாசலில் வரவேற்று சபைக்கு அழைத்து வந்தார். சரியாக 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தொடர்ந்து கவர்னர் பர்னாலா உரை நிகழ்த்தினார்.
 
கவர்னர் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
 
இந்த அரசு, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதியன்று மகளிருக்கு மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கும். 2011- 2012 ஆம் ஆண்டு சுமார் 25 லட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெறும்.
 
பொது விநியோகத்திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய சுமார் 1.83 கோடி குடும்பங்களைச் சேர்ந்த மகளிர் இத்திட்டத்தினால் படிப்படியாகப் பயனடைவர்.   முந்தைய அரசால் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தற்போது செயலற்ற நிலையில் உள்ளது. அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை உயிர்ப்பித்து மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து கேபிள் சேவையை நியாயமான கட்டணத்தில் வழங்கவேண்டும் என்று பொதுமக்களிடம் பெருத்த எதிர்ப்பார்ப்பு உள்ளது. எனவே, பொதுநலனைக் கருத்தில்கொண்டு இந்த நிறுவனத்தை புதுப்பித்து செயல் பாட்டுக்குக் கொண்டு வருவதுடன் கடைக்கோடியில் உள்ள உள்ளூர் கேபிள் டி.வி. இயக்குபவர்கள் பாதிக்காத வகையில் தனியார் கேபிள் டி.வி. சேவை அரசுடமை ஆக்கப்படும்.
 
பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக பெண்களின் நிலையை உயர்த்துவதே இந்த அரசின் தலையாய நோக்கங்களுள் ஒன்றாகும். பாராளுமன்றத்தில், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு சட்ட முன்வடிவை விரைவில் கொண்டு வரவேண்டும் என இந்த அரசு வலியுறுத்துகிறது.
 
சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு தொடர்ந்து கவனம் செலுத்தி போதிய அளவு அவர்களுக்கு சுழல் நிதி மற்றும் வங்கிக் கடன் பெறு வதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.
 
இவ்வாறு கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.
 
கவர்னர் தனது ஆங்கில உரையை 10.18 மணிக்கு முடித்தார். கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் ஜெயக்குமார் வாசித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக