வாஷிங்டன்: அமெரிக்காவின் பேஸ்புக் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த 2004-ம் ஆண்டு ‘பேஸ்புக்’ சமுதாய இணையதள சேவையை தொடங்கியது. இமெயில் அக்கவுன்ட் போல யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொள்ளலாம். தகவல், முக்கிய விவரங்கள், நாட்டு நடப்புகள், கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம். பள்ளி, கல்லூரி, தேசபக்தி, கம்யூனிசம் இப்படி குழுக்களாக இணைந்தும் கருத்து பரிமாற்றம் செய்யலாம். ஆரம்பத்தில் குறைந்த அளவிலான மக்களே இதை பயன்படுத்தினர். நாள் ஆகஆக சூடுபிடித்தது. 2008-ல் 10 கோடி பேர் பயன்படுத்தினார்கள்.
கடந்த ஜனவரி கணக்குப்படி உலகம் முழுவதும் மொத்தம் 60 கோடி பேர் பயன்படுத்துவதாக கூறப்பட்டது. இங்கிலாந்தில் பாதி பேர் (3 கோடி) பயன்படுத்துகிறார்கள் என்றும் பெருமையாக பேசினார்கள். பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் (27) ரூ.60.68 ஆயிரம் கோடிக்கு அதிபரானார். உலகின் 52-வது பணக்காரர் என்ற பெருமையை பெற்றார். பேஸ்புக்கின் மவுசு சமீபகாலமாக குறைந்து வருவதாக தற்போது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் ஒரு லட்சம் பேர் கடந்த மாதத்தில் பேஸ்புக் இணைப்பில் இருந்து ஜகா வாங்கிவிட்டார்கள்.
அமெரிக்காவில் 68 லட்சம், கனடாவில் 15 லட்சம், ரஷ்யா, நார்வேயில் ஒரு லட்சம் என்று உலகம் முழுக்க பேஸ்புக் இணைப்பில் இருந்து விலகியிருக்கிறார்கள்.
‘‘முன்பு உலகம் போரடித்தது. அதனால் எல்லாரும் கம்ப்யூட்டர், இணையதளம், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமுதாய இணைப்பு இணையதளங்களில் கதியாக கிடந்தார்கள். இப்போது இது போரடிக்கிறது. வெளியேறுகிறார்கள்’’ என்கிறார் அமெரிக்காவை சேர்ந்த இன்டர்நெட் உளவியல் நிபுணர் கிரகாம் ஜோன்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக