
இன்று டெல்லி சிபிஐ கோர்ட்டில் கனிமொழி தரப்பில் வைக்கப்பட்ட வாதம் குறித்து சுப்பிரமணியம் சாமி கூறுகையில்,
வழக்கில் தனக்குத் தொடர்பில்லை, தான் நீதித்துறையை மதிப்பவர், பெண், எம்.பி என்று கனிமொழித் தரப்பில் வைக்கப்பட்டுள்ள வாதம் செல்லாத வாதமாகும். கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்கு முக்கியத் தொடர்பு உள்ளது. இதற்கான ஆதாரங்களும் தெளிவாக உள்ளன.
கனிமொழிக்கு இந்த விவகாரத்தில் உரிய தொடர்பு இருப்பதை சிபிஐ ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது கனிமொழியைக் காப்பாற்றுவதற்காக தற்போது ராசாவை பலிகடாவாக்க திமுக முடிவு செய்து விட்டது. ராசா எவ்வளவு நாளைக்கு சிறையில் இருக்கிறாரோ, அத்தனை நாட்களுக்கு திமுகவுக்கும், கனிமொழிக்கும் பாதுகாப்பு என்பதால் ராசாவை முழுமையாக சிறையிலேயே அடைத்து வைக்க திமுக முயற்சிக்கிறது என்றார் சாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக