ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகிறார் ராகுல்காந்தி.


அடுத்த மாதம் நவம்பர் 19 ஆம் தேதி இந்திராகாந்தி பிறந்த நாள் வரும் நிலையில்..
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகிறார் ராகுல்காந்தி.காங்கிரஸ் கட்சி பல் வேறு ஊழல் புகார்களில் சிக்கித் திணறி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் படு தோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்திய அளவில் எதிர்ப்பலை வீசி வருகிறது. 2014ரூல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இது எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் இதை சமாளிக்க மன்மோகன் சிங்கை அகற்றி விட்டு சோனியாகாந்தியை பிரதமராக்கும் முடிவை சில காங்கிரஸ் தலைவர்கள் எடுத்தனர். ஆனால் இத்தாலியில் பிறந்தவர் என்பதால் எதிர்கட்சிகள் செய்யும் பிரச்சாரத்தை சமாளிக்க முடியுமா என்ற சங்கடத்தோடு அவரது உடல் நலமும் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. அவர் கர்ப்பப்பை புற்று நோய்க்கு தொடர் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் ராஜீவ்காந்தி, சோனியாவின் புதல்வரான ராகுல்காந்தியை பிரதமராக்கும் முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. 
 
அடுத்த மாதம் நவம்பர் 19  ஆம் தேதி இந்திராகாந்தி பிறந்த நாள் வரும் நிலையில் அன்று ராகுல்காந்தியை பிரதமராக்குவதற்கு முன்னோட்டமாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனாலும் மன்மோகனை நீக்கி விட்டு அவரை பிரதமராக்குவதை விட வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுலை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த வருடத்தில் ஆறாவது முறையாக இன்றோ நாளையோ பெட்ரோல் விலை உயர்கிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஈழப் போரின் பின்னர் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எண்ணம் வேரோடி விட்டது என்பதும் கூடத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக