ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழக சிறைக் கைதிகளுக்கு இனி 'டவுசர்' கிடையாது- 'பேண்ட்' கொடுக்கப்படும்



சென்னை: தமிழக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இனிமேல் டவுசருக்குப் பதில் பேண்ட் தர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர், கடலூர் உள்பட 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகளும், 3 மகளிர் சிறைச்சாலைகளும், 5 சிறப்பு துணை சிறைகளும், 9 மாவட்ட சிறைச் சாலைகளும், 94 துணைச் சிறைகளும், 2 திறந்தவெளி சிறைச்சாலைகளும் உள்ளன. இதுதவிர 12 சிறார் சீர்திருத்தப் பள்ளியும் உள்ளன. 

இந்த சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட 15,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களி்ல் 5000க்கும் மேற்பட்டோர் தண்டனை பெற்ற கைதிகள் ஆவர். சிறைச்சாலைகளில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு தற்போது வெள்ளை நிற சட்டை மற்றும் கால்சட்டை(டிரவுசர்) கொடுக்கப்படுகிறது. இதை மாற்றி கால் சட்டைக்குப் பதில் முழு நீள பேண்ட் கொடுக்கலாம் என்று அரசுக்கு சிறை நிர்வாகம் பரிந்துரை செய்திருந்தது.

இதைப் பரிசீலித்த தமிழக அரசு அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து இனிமேல் தண்டனை பெற்ற கைதிகளுக்கு கால் சட்டைக்குப் பதில் பேண்ட் தரப்படும்.

ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில், கைதிகளுக்கு கோழிக்கறி உள்ளிட்ட அசைவ உணவுகளை வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் கைதிகளுக்கு கால்சட்டை போய் முழு நீள பேண்ட் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக