அனந்த்: குஜராத்தில் நடுரோட்டில் சென்று கொண்டிருந்த நானோ கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குஜராத் மாநிலம், அனந்த் என்ற இடத்தை சேர்ந்தவர் ஹப்சா முகம்மது இக்பால் கதடி. இவர் அங்குள்ள காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கதடியின் கணவர் தனது நண்பர்கள் 4 பேருடன் பணிநிமித்தம் காரணமாக நானோ காரில் அலுவலகம் புறப்பட்டனர். அனந்த் நகரில் உள்ள கிருஷ்ணா சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, காரின் எஞ்சினிலிருந்து திடீரென குபுகுபுவென புகை வந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கதடியின் கணவர் உடனடியாக சாலை ஓரம் காரை நிறுத்திவிட்டு, அனைவரும் காரில் இருந்து அவசரம் அவசரமாக இறங்கினர்.
அடுத்த நிமிடம் எஞ்சினிலிருந்து கிளம்பிய தீ கார் முழுவதும் பரவி எரிய துவங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர்.
நடுரோட்டில் நானோ கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தக்கசமயத்தில் கார் தீப்பிடித்ததை கதடியின் கணவர் கண்டுபிடித்ததால் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து அனைவரும் உயிர் தப்பினர்.
இந்த விபத்துக்கான உரிய காரணம் தெரியவில்லை. நானோ கார் தீவிபத்தில் சிக்கிய 8 வது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக