ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ராஸ் அல்கைமாவில் இந்தியக் குடும்பம் தற்கொலை!


துபை: ஐக்கிய அரபு எமிரேட்டில் தாய், தந்தை, மகள் உள்பட மூன்றுபேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ராஸ் அல் கைமா என்ற இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களாக அந்த வீடு பூட்டி கிடந்த நிலையில் அங்கிருந்து துர்நாற்றம் வரத்தொடங்கியது இதை கவனித்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல்துறையில் புகார் செய்தனர். உடனே காவல்துறையினர் விரைந்து வந்து அவ்வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு 44 வயது மதிக்கத்தக்க ஒருவரும், அவரது மனைவியும் (வயது 31) தூக்கில் பிணமாக தொங்கினர். மற்றொரு அறையில் அவர்களது 8 வயது மகள் முகம் துணியால் மூடப்பட்ட சுற்றப்பட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தாள். பணப் பிரச்சினை காரணமாக தங்களது குழந்தையை தூக்கில் போட்டு கொன்று விட்டு பெற்றோரும் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக