ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பார்ப்பவர்களை வாய்பிளக்க வைத்த பறக்கும் மனிதன்

பார்ப்பவர்களை வாய்பிளக்க வைத்த பறக்கும் மனிதன் ஒரு wingsuit பைலட் மலைப்பகுதியிலிருந்து ஒரு குறுகிய பிளவு மூலம் அதிக உயரம் சென்று சாதனை படைத்திருக்கிறார்.


ஹெலி ஒன்றில் 6000 அடி உயரத்திலிருந்து தன்னை தயார் படுத்திக்கொண்டார் Jeb Corliss , 75mph வேகத்தில் வீசும் காற்றுக்கு குறுக்காக சீனாவின் ஹுனன் பகுதியில் Tianmen mountain எனப்படும் மலைத்தொடரிலே இந்த சாகசத்தை நிகழ்த்தினார்.

கால்கள் மற்றும் உடல் இடையே மெல்லிய சவ்வு போன்ற அமைப்பே இவரை காற்றில் நிலையாக வைக்க உதவுகிறது.

உயரம் அதிகமாகும் போது ஏற்படும் புவியீர்ப்பு மாற்றத்தை தனக்கு சாதகமாக பயன்படித்தியே இவரின் பறப்பு அமைந்தது.

தனது தலைக்கவசத்தில் இருந்த வீடியோ கமரா மூலம் மிகவும் துல்லியமாக படங்களும் எடுக்கப்பட்டது.

மலையின் நடுவே இயற்கையாக அமைந்த குகை போன்றதொரு பகுதியினூடாக மிக வேகமாக நுழைந்து மறுபகுதியினூடாக வெளிவந்தார்.

இந்த சாகச நிகழ்வை கண்டுகளிக்க மலையடிவாரத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
26 Sep 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக