ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மு.க.அழகிரியிடம் கலெக்டர் விசாரிக்க தடை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்காக நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக ராமலிங்கம் என்பவர் மதுரை கலெக்டரிம் புகார் அளித்தார். புகாரின் பேரில் நாளை (செப். 16) விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அவரது மனைவி மற்றும் மகனுக்கு கலெக்டர் சகாயம் நோட்டீஸ்
அனுப்பினார். இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் மு.க.அழகிரி, அவரது மனைவி, மகன் சார்பில் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஜோதிமணி, சுந்தரேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் வீரா கதிரவன், ஜானகிராமுலு ஆஜராகினர். இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘’கலெக்டர் அனுப்பிய நோட்டீசில் தேவையில்லாமல் மகாத்மா காந்தி குறித்தெல்லாம் குறிப்பிட்டுள்ளார். புகார் வந்திருப்பது தொடர்பாக விசாரணையில் ஆஜராகுமாறு மட்டுமே குறிப்பிட்டிருக்க வேண்டும். மனுதாரர்களிடம் எந்த விளக்கமும் கேட்காமல் ஆக்கிரமிப்பு செய்ததாக எப்படி முடிவு செய்ய முடியும்?

இதை விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பிய நோட்டீசாக கருத முடியாது. இந்த நோட்டீசை திரும்ப பெற்று, முறைப்படி அனுப்ப வேண்டும். இந்த நோட்டீசில் உள்ள தேவையில்லாத கருத்துக்களை நீக்கிவிட்டு, இந்த நோட்டீசையே, விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்பப்பட்ட நோட்டீசாக கருதலாம். இதுதொடர்பாக, கலெக்டரிடம் விவரம் கேட்டு அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
வழக்கு நிலுவையில் இருப்பதால், நாளை மனுதாரர்களிடம் விசாரணை நடத்தக்கூடாது என கலெக்டரிடம் தெரிவிக்கும்படி கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக