ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிமுக அணியில் இருந்து மேலும் 2 கட்சிகள் விலகல்


சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் உட்பட மேலும் 2 கட்சிகள் வெளியேறி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி நாளை தனது முடிவை அறிவிக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடப் போவதாகவும், காங்கிரசுடன் உள்ள கூட்டணி தொடரும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்தார்.  அதைத் தொடர்ந்து, அக்கூட்டணியில் உள்ள பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தன.
 அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் குழு  அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுடன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
 முக்கிய கூட்டணி கட்சியான தேமுதிக மட்டும் தங்களை பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால் அவர்களை கடைசி வரை   அழைக்காததால் அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்து விட்டார்.  மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான  வேட்பாளர்களையும் விஜயகாந்த் அறிவித்தார்.
   அதிமுக கூட்டணியில் எஞ்சியுள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் முடிவுகள் மட்டும் தெரியாமல் தவித்தபடி  இருந்தன.
 இந்தநிலையில் நேற்று பிற்பகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் போயஸ்கார்டன் சென்று அதிமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். பின் பாரிமுனையில் உள்ள அக்கட்சியின் வடசென்னை மாவட்ட அலுவலகத்தில் மாநிலக் குழுவின் கூட்டம் நடந்தது.
 கூட்டத்துக்குப் பின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையிலான குழுவினர்,  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்துக்குச் செ ன்று மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை இரு கட்சிகளையும் தொடர்ந்து புறக்க ணிப்பது குறித்து விவாதித்தனர்.
இந்தக் கூட்டம் முடிந்த பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தனர். முதல் கட்டமாக மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக மாநி லக் குழு உறுப்பினர் இரா.ஜோதிராம், திருப்பூருக்கு மாவட்டச் செயலாளர் காமராஜ்(எ) சுப்பிரமணியம், வேலூருக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.லதா, கோவைக்கு மாவ ட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
 சென்னை மாநகராட்சிக்கு 14 வார்டுக்கும், தூத்துக்குடிக்கு 9 வார்டுக்கும், சேலத்திற்கு 8 வார்டுக்கும், வேலூருக்கு 5 வார்டுக்கும், மதுரைக்கு 25 வார்டுக்கும், திருநெல்வே லிக்கு 5 வார்டுக்கும், திருப்பூருக்கு 43 வார்டுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. அதேபோல 17 நகராட்சி தலைவர், 48 பேரூராட்சி தலைவர், 33 மாவட்ட பஞ்சாயத்து  வார்டுகளுக்கும் வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் அறிவித்தது.
மார்க்சிஸ்ட் கட்சியை போலவே, புதிய தமிழகம் கட்சியும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. ஏற்கனவே தேமுதிக விலகிய நிலையில்,  அதிமுக அணியில்  இருந்து மேலும்  2 கட்சிகள் இப்போது தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.
 அதேநேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தனது முடிவை அறிவிக்கவில்லை. அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நாளை சென்னையில் நடக்கிறது. இந்தக்  கூட்டத்தில் அதிமுக கொடுக்கும் பதவிகளை வாங்கிக் கொள்வதா? அல்லது மார்க்சிஸ்ட் போல தனித்துப் போட்டி அல்லது மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா  என்பதை அப்போது முடிவு எடுக்க இருப்பதாக அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக