ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 10 இந்தியர்களும் தமிழ்நாட்டவர்கள்



காத்மாண்டுவிலிருந்து கிளம்பிய புத்தா ஏர் நிறுவன விமானம் விபத்தில் சிக்கி நொறுங்கி விழுந்தது. இதில் 10 இந்தியர்கள் உள்பட 18 பேர் பலியானார்கள். உயிரிழந்த பத்து இந்தியர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.



எவரெஸ்ட் சிகரத்தை வானிலிருந்து சுற்றிப் பார்ப்பதற்காக சென்ற சுற்றுலாப் பயணிகள் இவர்கள். விமானத்தில் 3 நேபாள நாட்டவர்கள் தவிர மீதமிருந்த 16 பேரும் வெளிநாட்டவர். இவர்களில் 14 பேர் இந்தியர்கள். அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்தர்கள் என்று தெரிய வந்துல்ளது.


விபத்தில் 10 தமிழர்கள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர்.


விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் கடும் பனி மூட்டத்தில் அது சிக்கிக் கொண்டது. இதனால் நிலை தடுமாறிய விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிசகுநாராயண் என்ற கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. தலைநகர் காத்மாண்டுவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கிராமம் உள்ளது.


மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இருப்பினும் வானிலை மோசமாக இருப்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


விபத்து குறித்து அதை நேரில் பார்த்த ஹரிபோல் போடல் என்பவர் கூறுகையில், கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற் கூரை மீது விமானம் விழுந்தது. பின்னர் அது உடைந்து விழுந்தது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக