ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

2500 தமிழக மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை


2500 தமிழக மீனவர்களை விரட்டியடித்தது இலங்கை கடற்படை


ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2500 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதுஅங்கு வந்த இலங்கை கடற்படைக் காடையர்கள் மீனவர்களைத் தாக்கி வலைகளை அறுத்து எறிந்தனர். இதையடுத்து மீனவர்கள் கரைக்குத் திரும்பினர்.

தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம்நாகை மாவட்ட மீனவர்களை மீன்பிடிக்கவே விடாமல் அட்டூழியம் செய்து வருகிறது இலங்கைக் கடற்படை. இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2500 மீனவர்கள் 500க்கும் மேற்
பட்ட படகுகளில் நேற்று மாலை கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 5 படகுகளில் இலங்கைக் கடற்படையினர் விரைந்து வந்தனர். தமிழக மீனவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தாக்க முயன்றனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் அங்கிருந்து தப்பி வர முயன்றனர். அப்போது குறுக்கிட்ட சில படகுகளை நிறுத்திய இலங்கைக்கடற்படையினர் மீனவர்களின் வலைகளை கிழித்து எறிந்தனர். பின்னர் மிரட்டி விரட்டினர்.

இதையடுத்து மீனவர்கள் வேகமாக கரைக்குத் திரும்பினர். இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் மீ்னவர்களிடையே கடும் கொதிப்பு நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக