ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

2 வருடங்கள் அமைதியான போராளிகள், மீண்டும் ஆயுதங்களுடன்!

இரண்டு வருடங்களுக்கு முன் வடக்கு நைஜீரியாவில், இந்த தீவிரவாத இயக்கம் சிறுசிறு தாக்குதல்களையே நடாத்திக் கொண்டிருந்தது. இவர்களுடைய பெரிய தாக்குதல்களே, தனியே செல்லும் போலிஸ்காரர்களைத் தாக்கிவிட்டு, அவர்களுடைய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ஓடுவது.

தீவிரவாத இயக்கத்தின் பெயர், போகோ ஹாரம்.
இந்த தீவிரவாத இயக்கத்தை நசுக்குவது, நைஜீரிய ராணுவத்துக்கு பெரிய காரியமாக இருக்கவி்ல்லை. இவர்களுடைய மறைவிடத்தைச் சூழ்ந்து கொண்ட நைஜீரிய ராணுவம், யந்திரத் துப்பாக்கிகளால் சராமாரியாகச் சுட்டுத் தள்ளியதில், நூற்றுக் கணக்கான போராளிகள் கொல்லப்பட்டனர். அத்துடன் இயக்கத்தின் தலைவரையும் பிடித்து, சுட்டுக் கொன்றது ராணுவம்.
தலைவரும் இல்லாமல், முக்கிய போராளிகளும் கொல்லப்பட்டுவிட, போகோ ஹாரம் இயக்கமே முடங்கிப் போனது.
அதெல்லாம் பழைய கதை. இப்போது, திடீரென புதிய உத்வேகத்துடன் தாக்குதல்களை நடாத்தத் தொடங்கியுள்ளது இந்த இயக்கம். கடந்த வாரத்தில் மாத்திரம் வடக்கு நைஜீரியாவில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்புகளை நடாத்தியுள்ளார்கள் இவர்கள்.
இந்த மூன்று குண்டு வெடிப்புகளிலும் I.E.D (Improvised Explosive Devices) பயன்படுத்தப் பட்டுள்ளது, நைஜீரிய ராணுவத்தை அதிர வைத்துள்ளது. நைஜீரிய ராணுவம் மாத்திரமின்றி, அமெரிக்காவும் இதில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டது. காரணம், இந்த தீவிரவாத அமைப்பு திடீரென பலம்பெற்றுள்ளதன் காரணம், அதன் பின்னணியில் அல்-காய்தா இருக்கலாம் என்று சி.ஐ.ஏ. கூறுகின்றது.
வடக்கு நைஜீரியாவின் கவர்னர் காசிம் ஷெட்டிமா, “இவர்களுக்கு I.E.D கிடைத்தது எப்படி என்றே தெரியவில்லை. இவர்கள் நைஜீரியாவுக்கு உள்ளே பயிற்சி எடுத்ததாக தெரியவில்லை. இந்தக் குழுவிலுள்ள சிலர் சூடான் நாட்டுக்குச் சென்று வந்துள்ளனர். அங்கே தீவிரவாதப் பயிற்சி பெற்றுத் திரும்பியிருக்கலாம்.” என்கிறார்.
சமீப காலத்தில் சூடானில், அல்-காய்தாவின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது என்கிறது சி.ஐ.ஏ.யின் உளவு அறிக்கை. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸிலுள்ள அல்-காய்தாவினரும், சுழர்ச்சி முறையில் சூடான் வந்து செல்வதாகவும் கூறுகின்றது சி.ஐ.ஏ. ரிப்போர்ட்.
போகோ ஹாரம் இயக்கத்தின் இந்த திடீர் எழுச்சியால், நைஜீரிய அரசு கலங்கித்தான் போயிருக்கின்றது. கடந்த மாதத்தில் மாத்திரம் குறைந்தது 120 பேர் குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் மிகச் சிலரே, ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள்.
தீவிரவாத இயக்கத்தின் தாக்குதல்கள் சகாராவை அண்மித்த பகுதிகளிலேயே அதிகமாக நடைபெறுகின்றன. இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பான்மை முஸ்லிம்கள். இஸ்லாமிய (ஷாரியா) சட்டம் இப்பகுதிகளில் நடைமுறையில் இருந்தாலும், அது கடுமையாகப் பின்பற்றப் படுவதில்லை.
அனைத்துப் பெண்களும் இஸ்லாமிய முறைப்படி உடை அணிவதில்லை. தவிர, இங்குள்ள அரசு ஷ்டோர்களில் மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கடுமையான மதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் போகோ ஹாரம் அமைப்பினர், இந்தப் பகுதியை கடுமையான சட்டங்களுக்கு உட்படுத்த முயல்கின்றனர்.
இதுதான் மோதலாக வெடித்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கடுமையான சட்டங்களை விரும்பவில்லை. அதே நேரத்தில் நைஜீரிய ராணுவத்தையும் அவர்கள் விரும்பவில்லை. இதற்குக் காரணம், ராணுவத்தினரின் நடவடிக்கைகள், ‘முதலில் துப்பாக்கிச் சூடு. அதன்பின்னரே கேள்வி’ என்ற வகையில் இருப்பதுதான்.
தீவிரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பல பொதுமக்களைக் கொன்றிருக்கின்றது ராணுவம். இதனால், தீவிரவாத அமைப்பினரின் கடும் மதக் கோட்பாடுகளையும் மீறி, மக்களின் ஆதரவு அவர்களுக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது.
போகோ ஹாரம் இயக்கத்தில் தலைவர் கொல்லப்பட்ட நிலையிலும், தலைவரே இல்லாமல் அந்த அமைப்பு ராணுவத்துக்கு அச்சுறுத்தலாகச் செயற்படுவதுதான் ஆச்சரியமான உண்மை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக