ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தான்சானியாவில் படகு கவிழ்ந்து 163 பேர் பலி

தான்சானியாவில் படகு கவிழ்ந்த விபத்தில், 163 பேர் பலியாகினர். மேலும், 100 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தான்சானியா நாட்டில் சான்சிபார் மற்றும் உன்குசா, பெம்பா தீவுகளுக்கு இடையே 600 பேருடன் சென்று கொண்டிருந்த படகு நேற்றுமுன்தினம் இரவில் கவிழ்ந்தது.
ரம்ஜான் விடுமுறையை கழிப்பதற்காக தீவுகளுக்கு சுற்றுலா சென்ற பலர் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், இந்தச் சம்பவம் நிகழ்ந்தது
. இதில், படகில் பயணம் செய்த 325 பேர் மீட்கப்பட்டனர். 163 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
சான்சிபார் மாகாண அமைச்சர் மொகமத் அபொட் கூறுகையில், "விபத்தில் பலியான 163 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 325 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். படகு ஒரு புறமாக கவிழ்ந்ததில், படகில் இருந்த பொருட்கள் மோதி பலத்த காயமடைந்த 40 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர்.
மேலும், படகு கவிழ்ந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்' என்றார்.
விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட ஏழு வயது குழந்தை ஆயிஷா மொகம்மது கூறுகையில், "படகு கவிழ்ந்த போது பயமாக இருந்தது. எல்லோரும் இருட்டில் கூச்சலிட்டு அலறினர். என் அம்மாவை காணவில்லை.
அவரை இழந்து விட்டதாக கருதுகிறேன். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த என்னை மீட்பு படகு வந்து மீட்டது' என்றார்.
மீட்கப்பட்ட 50 வயது செய்யது அமோர் கூறுகையில்,"பயணிகளாலும், சரக்குகளாலும் படகு நிறைந்திருந்தது. திடீரென படகு கவிழ்ந்த போது, கூக்குரலிட்டு கத்தினேன். மீட்பு படகு என்னை காப்பாற்றியது' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக