இலண்டன் : தலைப்பைப் பார்த்தவுடன் இந்நேரத்தின் வாசகர்கள் யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். ஏனெனில் இப்படி ஒரு அறிவிப்பு விரைவில் இந்திய கிரிக்கெட் வாரியத்திலிருந்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உலக கோப்பை வெற்றியைக் கூட கொண்டாட முடியா அளவு பிஸியாக இருந்த இந்திய அணி தற்போது கோமா நிலையில் உள்ளது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தற்போது தோனி, விராத் கோஹ்லி, முனாப் பட்டேல், சுரேஷ் ரெய்னா என்ற நான்கு பேர் மட்டுமே தற்போது அணியில் உள்ளனர். மற்றவர்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு மூலையாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
சேவாக் : இந்தியாவின் அதிரடி துவக்க ஆட்டக்காரர் சேவாக் தோள் பட்டை அறுவைச் சிகிச்சையின் பாதிப்பு மற்றும் இடது காதில் செவித் திறன் பிரச்னையிலிருந்து இன்னும் விடுபடவில்லை.
கவுதம் கம்பீர் : மங்கிய பார்வை மற்றும் வாந்தியெடுத்தல். இத்தொடர் மட்டுமல்லாமல் சாம்பியன்ஸ் லீக்கிலும் விளையாட மாட்டார்.
ஹர்பஜன் சிங் : வயிற்று வலியால் ஒரு தினப் போட்டியில் விளையாட இயலாது.
யுவராஜ் சிங் : கைவிரலில் ஏற்பட்ட காயமால் மேற்கிந்திய தீவில் நடைபெற்ற தொடரிலிருந்தே விளையாடவில்லை.
ஜாஹிர் கான் : இந்தியாவின் ஸ்டார் பவுலருக்கு ஏற்பட்ட காயத்தால் இந்திய பந்து வீச்சே நோஞ்சானாய் கிடப்பது சொல்லி தெரியவேண்டியதில்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக