ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

10 மாநகர மேயர் பதவிக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளார் ஜெயலலிதா.


அதிமுகவின் இந்த அதிரடி அறிவிப்பால் தேமுதிக உள்பட கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கூட்டணியில் உள்ள தேமுதிக, மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட்க்கு ஒரு இடம் கூட இல்லை என்பதால் அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது
மேயர் தேர்தலில் சென்னை மாநகர அதிமுக வேட்பாளராக சைதை துரைசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.   மதுரை மாநகர வேட்பாளராக  முன்னாள் எம்.பி. ராஜன் செல்லப்பா அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாநாகர அதிமுக வேட்பாளராக எம்.எஸ்.ஆர். ஜெயாவும், வேலூர் வேட்பாளராக கார்த்தியாயினியும்அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு வேட்பாளராக மல்லிகா பரமசிவம் அறிவிக்கப்பட்டுள்ளார்.   கோவை வேட்பாளராக   முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, தூத்துக்குடி வேட்பாளராக சசிகலா புஷ்பா, சேலம் வேட்பாளராக எம்.சவுண்டப்பன், நெல்லை வேட்பாளராக விஜிலா சத்யானந்த்தும்,  திருப்பூர் மாநகர அதிமுக வேட்பாளராக ஆர்.விசலாட்சியும், அறிவிக்கப்பட்டுள்ளனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக