ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எகிப்து:மக்கள் எழுச்சிக்கு உத்வேகமளித்தவர் விடுதலை


கெய்ரோ,பிப்.9:வஹீல் கனீம்.எகிப்திய சர்வாதிகார ஆட்சியின் கறுப்பு தினங்களிலிருந்து நாட்டை விடுவிக்கக்கோரி இளைஞர்களுக்கு துணிச்சலை ஊட்டிய கூகிள் எக்ஸ்க்யூட்டியாவார். இவர் எகிப்திய மக்களுக்கு நேசத்திற்குரிய நபராக தற்பொழுது மாறிவிட்டார். இரண்டு வாரங்களாக கண்களை கட்டப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டிருந்த கனீம் கடந்த திங்கள் கிழமை விடுதலைச் செய்யப்பட்டார்.

தனது ஃபேஸ்புக் பக்கங்களில் இணையதளத்தில் 'இளைஞர்களின் புரட்சி' என்ற பிரச்சாரத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கனீம் எகிப்திய வீதிகளுக்கு வரவழைத்திருந்தார்.

மக்களின் எழுச்சிமிகு போராட்டம் துவங்கி இரண்டு தினங்களுக்கு பிறகு அதாவது ஜனவரி 27-ஆம் தேதி கனீமை காணவில்லை. காரணம், அதிகாரிகள் கனீமை கைதுச் செய்து சிறையிலடைத்திருந்தனர்.

இவ்விஷயத்தை கேள்விப்பட்ட உடன் மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக கனீம் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். சிறைக்கு வெளியே ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த கனீம், உணர்ச்சி மேலிட பேசினார்.

'தேசத்துரோக குற்றம் சுமத்தி என்னை கைதுச் செய்தனர். ஆனால், தேசத்திற்கு துரோகம் செய்பவர்களெல்லாம் சுகமாக சுற்றித் திரியும் சூழல்தான் இன்று நிலவுகிறது. எகிப்தின் மீதான் நேசம்தான் என்னை வீதிக்கு கொண்டுவந்தது. தர்மத்திற்கு எதிரான ஆட்சிக்கு எதிராக போராட வேண்டியது ஒவ்வொரு இளைஞர்களின் கடமையாகும்.' என்ற கனீம் பேட்டியை முடிக்கும் முன்பு போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் படங்களை காண்பித்த பொழுது கனீம் கதறி அழுதார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக