தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி குறித்து ஒவ்வொரு கட்சிகளும் முடிவு செய்துவிட்ட நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மட்டும் இன்னும் யாருடன் கூட்டணி என்பது குறித்து சஸ்பென்ஸாக வைத்துள்ளார். இந்த சஸ்பென்ஸ் குறித்து அ.இ.அ.தி.மு.க வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள், அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முடிவு எடுத்துவிட்டார் என்றாலும், தே.மு.தி.க.வுக்கு 50 இடம், துணை முதலமைச்சர் பதவி - அதுவும் அவரது மனைவி பிரேமலதாவுக்கு - வேண்டும் என்று கறாராக கூறிவிட்டாராம். இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க.வுடன் பேசுவதற்காக தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரை விஜயகாந்த் நியமித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக