ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எடியூரப்பாவின் செயல் தவறுதான் ஆனால் தவறில்லை.. - உளறும் நிதின் கட்கரி

தேச பக்தர்களாகவும், கறைபடாத கரத்திற்கு சொந்தக்காரர்களாகவும், நேர்மையானவர்களாகவும் வேடமிட்ட சங்க்பரிவார்களின் முகமூடி ஒவ்வொன்றாக கழன்றுக் கொண்டிருக்கிறது.

லஞ்சம் வாங்குவதிலும் கூட அந்நிய நாட்டு கரன்சியை(டாலர்)த்தான் வாங்குவேன் என்று அடம்பிடித்த இவர்களின் கேடுகெட்ட தேசபக்தி பங்காரு லட்சுமணன் விவகாரத்தில் வெளியானது.

கார்கில் போரில் இறந்த ராணுவத்தினரின் உடலை அடக்கம் செய்ய வாங்கிய சவப்பெட்டிகளில் நடத்திய ஊழல் மூலம் இந்தியாவின் மானத்தையே காற்றில் பறக்கவிட்டனர்.

லாபகரமான நிறுவனங்களை தரகு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதற்காக தனியாக அமைச்சகம் துவங்கிவிட்டு இந்தியாவை இருளவைத்தனர்.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பு,ரத யாத்திரை,நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளையும், இனப்படுகொலைகளையும் நிகழ்த்தி இந்தியாவை வன்முறை தேசமாக மாற்றினர்.

கலவரங்களிலும், இனப் படுகொலைகளிலும் கொடூரமான பாலியல் வன்புணர்வுகள், கோவிந்தாச்சார்யா-உமாபாரதி காதல், வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தபொழுது பிரம்மச்சாரி வாஜ்பாய் அடித்தக் கூத்துக்கள் உள்ளிட்டவை சங்க்பரிவார்களின் ஒழுக்க வாழ்வை படம் பிடித்துக் காட்டின.

தற்போது கர்நாடகா மாநிலத்தில் தனது பாட்டன் முப்பாட்டன் சம்பாதித்த சொத்தைப்போல் கருதி அரசு நிலத்தை அபகரித்து சொந்த மகன்களுக்கு விற்பனைச் செய்துள்ளார் எடியூரப்பா.

இந்நிலையில் காங்கிரஸ் அரசின் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைக் குறித்து ஓயாது பேசும் பா.ஜ.க எடியூரப்பா ஊழலில் சிக்கியதைக் குறித்து மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்து வருகிறது.

சமீபத்தில் இஸ்ரேலுக்கு சென்று ஷியோனிச பயங்கரவாதிகளுடன் கொஞ்சிக்குலாவிய நிதின் கட்கரி தற்போது காம்ரேட்டுகளின் கனவு தேசமான சீனாவுக்கு செல்கிறாராம்.

போகிற போக்கில் எடியூரப்பாவின் மீது வழக்குத்தொடர ஆளுநர் அனுமதியளித்த விவகாரம் குறித்து பேசுகையில், எடியூரப்பா தனது சொந்த மகன்களுக்கு அரசு நிலத்தை பதிவுச் செய்துக் கொடுத்தது அதர்மம்தான் ஆனால் இதற்கு முன்பும் பல முதல்வர்களும் இதனைச் செய்துள்ளார்கள் அவர்கள் மீதெல்லாம் வழக்குத்தொடர ஆளுநர் அனுமதியளிக்கவிலை எனக்கூறி எடியூரப்பாவின் ஊழலை நியாயப்படுத்த முயல்கிறார்.

இதே கருத்தைத்தானே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ஆ.ராசாவும் கூறுகிறார். முன்னர் பதவி வகித்த அமைச்சர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளைத்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தானும் செய்ததாக ஆர்.ராசா கூறிவருகிறார்.

கேரள மாநிலம் களமசேரியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பஸ் எரிப்பை தேச விரோதமாக சித்தரித்து படாதபாடுபடும் ஆட்சியாளர்கள், கர்நாடகாவில் 29 பஸ்களை கொளுத்தி வன்முறை வெறியாட்டம் ஆடிய ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்க்கொள்ளப் போகிறார்கள். இதுவெல்லாம் காங்கிரசுக்கும் பாசிச பா.ஜ.கவுக்குமிடையே நடைபெறும் கண்ணாமூச்சி ஆட்டமோ? காங்கிரஸ் கொள்கையே live or let live அதாவது வாழு அல்லது வாழவிடு என்பதுதான்.

என்னைக் குறை சொல்லாதே! இல்லையேல், உனது வண்டவாளத்தையெல்லாம் தண்டவாளத்தில் ஏற்றுவேன் என்பதுதான்.

சர்வாதிகாரத்தால் பின் அலி போட்ட ஆட்டத்திற்கு துனீசிய மக்களின் புரட்சி முடிவுக் கட்டியது. இவர்கள் ஜனநாயகம் என்ற பெயரால் போடும் கூத்துகளுக்கு மக்கள் எப்பொழுது முடிவுக் கட்டப் போகிறார்களோ?
விமர்சகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக