ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்றவாரம், நேரடியாக டிவி யில் ஒளிபரப்பான வீடியோ. நடுரோட்டில் இளம்பெண்ணை விரட்டி மானபங்கம். செய்தியின் பின்னணியை பாருங்க

சென்ற வாரம் நேரடியாக டிவி யில் ஒளிபரப்பான அதிர்ச்சி வீடியோ இணைப்பு. நடுரோட்டில் இளம்பெண்ணை விரட்டி, விரட்டி மானபங்கம் செய்த குடிகாரக் கும்பல்!என்ற பெயரில் இணையத்தில் வெளியான செய்தியின் பின்னணி இது தான் என்று இந்திய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி உங்களுக்கு..
லைவ் ரிலே” என்று சொல்லிக்கொண்டு எதையாவது தொலைக்காட்சியில் காட்டுவதை சீரியஸாக எடுத்துக் கொண்டு பதறினால் - நாம் பைத்தியக்காரர்களாகி விடுவோம் என்பதற்கு பெஸ்ட் உதாரணம் -கவுஹாத்திசம்பவம்.

இந்த சம்பவம் பற்றிய உண்மையான, முழு 
விவரங்கள் எந்த மீடியாவிலும் வெளி வராததால் 
நாம் பைத்தியக்காரர்கள் ஆனது எப்படி என்று  
கொஞ்சம் விவரமாகவே பார்ப்போம்..
கதை இப்படிப் போகிறது ….
அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் மதுபான விடுதி
அருகே ஒரு பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம்,
சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தராலும் (அந்த பெண்ணாலும்
கூடத்தான் !) எப்படி எல்லாம் பயன்படுத்திக் 
கொள்ளப்படுகிறது என்பதை – கொஞ்சம் பாருங்களேன் !
கவுஹாத்தியில் இரண்டு முக்கியமான லோக்கல் டிவி
சேனல்கள் -
Newslive,
DY365-
முதலாவது டிவி சேனல் (Newslive ) அஸ்ஸாம்
மாநில காங்கிரஸ் அரசின் சுகாதாரம் மற்றும் கல்வி
அமைச்சர் ஹிமன்தா பிஸ்வா சர்மா என்பவரின் மனவி
ரினிகி புயான் சர்மா என்பவருக்குச் சொந்தமானது.
இந்த டிவியின்  ரிப்போர்ட்டர் கௌரவ்ஜ்யோதி நியோக்
என்பவர் தான் இந்த நிகழ்ச்சியை  வீடியோவில் பதிவு
செய்து  வெளியுலகிற்கு   இந்த வீடியோ கிடைக்க 
காரணமாக இருந்தவர்.
இவர்களுக்கு எதிரி  – லோக்கல் டிவி DY365-
இதன் உரிமையாளர் கவுஹாத்தியைச் சேர்ந்த
பெரிய பிஸினஸ்புள்ளி  சஞ்ஜீவ் ஜெய்ஸ்வால்.
இவருக்கும்  காங்கிரஸ் கட்சிக்கும் ஒத்து வராது.
கவுஹாத்தியின் குறிப்பிடத்தக்க சமூக சேவகர்
டீம் அண்ணாவைச் சேர்ந்த அகில் கோகோய்.
இவர் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஊழல்களை
அவ்வப்போது அம்பலப்படுத்தி வந்திருக்கிறார்.
இவருக்கு, காங்கிரஸைப் பிடிக்காத DY365-
டிவி நிறைய முக்கியத்துவம் கொடுத்து, இவர்
வெளியிடும் ஆளும் கட்சியின் ஊழல் பற்றிய
தகவல்களை எல்லாம் வெளியிட்டு வந்திருக்கிறது.
இது பின்னணி.
இப்போது  நிகழ்வு பற்றி –  
ஜூலை 9ந்தேதி இரவு 9.30 மணி சுமாருக்கு,
கவுஹாத்தியில் ஜி.எஸ்.ரோடில் உள்ள ஒரு “பார்”
க்கு சம்பந்தப்பட்ட பெண்ணும், இன்னொரு பெண்ணும்,
3 பிற ஆண் நண்பர்களுடன் (!) பிறந்த நாளை
(குடித்து)கொண்டாட போயிருக்கிறார்கள்.  
யார் பணம் கொடுப்பது என்கிற
விஷயத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சண்டை
போட ஆரம்பித்திருக்கிறார்கள். “பார்” ஊழியர்கள்
5 பேரையும் “பார்”லிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள்.
வெளியே வந்த பிறகும் “போதையில்”சண்டை-சச்சரவு
தொடர்கிறது. அவர்களைச் சுற்றி கூட்டம் கூட 
ஆரம்பிக்கிறது. கூட வந்த பெண்ணும், 2 ஆண்களும்
அங்கிருந்து அகன்று விடுகிறார்கள். சம்பந்தப்பட்ட 
பெண்ணுடன் ஒரு ஆண் மட்டும்  கிண்டலும், கேலியுமாக
தொடர்கிறான். இதைப்பார்த்த சில போக்கிரி வாலிபர்கள்
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தாங்களும்
அதில் சேர்ந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில்
கூட வந்த ஆணும் ஓடி விடுகிறான். சுற்றி இருந்த
போக்கிரிகள் அந்தப் பெண்ணை என்ன செய்தார்கள்
என்பதைத் தான் அனைத்து தொலைக்காட்சி சானல்களும்
விழுந்து விழுந்து காட்டினவே !
இப்போது மீண்டும் பின்னணி -
இந்த இடத்தில் Newslive லோக்கல் தொலைக்காட்சி
நிருபர் கௌரவ் ஜ்யோதி நியோக் தோன்றுகிறார்.
உடனே, தன் அலுவலகத்திற்கு போன் செய்து, 
காமிரா டீமை அனுப்பும்படி சொல்கிறார். காமிராமேன்
வரும்வரை தன் செல்போனிலேயே வீடியோ எடுக்கிறார்.
உடனடியாக காமிராமேன் அங்கு வருகிறார். அனைத்து
கோணங்களிலும் வீடியோ எடுக்கப்படுகிறது.
வேறு நபர்கள் மூலம் தகவல் தெரிந்த போலீசார் சம்பவ
இடத்திற்கு வந்து பெண்ணை மீட்டுக் கொண்டு 
போகிறார்கள்.
அரை மணி நேரத்திற்குள்ளாக, Newslive லோக்கல்
தொலைக்காட்சியில் எடுக்க்கப்பட்ட வீடியோ காட்சி
எடிட் செய்யப்படாமல் விலாவாரியாக  காட்டப்படுகிறது.
“குடித்துவிட்டு, தெருவில் அசிங்கமாக நடந்து கொண்ட
பெண்ணுக்கு பொது மக்கள் கொடுத்த ட்ரீட்மெண்ட் -
அடித்து உதைத்து துரத்தினர்”
என்று தலைப்பு வேறு.
மறு நாள் காலை டிவி எடிட்டிங் டீம் உட்கார்ந்து
வீடியோவை விவரமாக ஆராய்கிறது.
பெண்ணை மானபங்கப்படுத்திய நபர்களில் 
முக்கியமானவர் “அமர்ஜோதி கலிதா” என்கிற ஆள்
என்பதை கண்டு கொள்கிறது.இந்த “கலிதா” 
அவர்களது எதிரியான DY365-தொலைக்காட்சியில்
ஒரு தொடரில் வழக்கமாக நடிக்கும் ஆள்.
எனவே இவர்களது எதிரிகளுக்கு நெருக்கமான ஆள் !
அவ்வளவு தான். ப்ளேட்டை திருப்பிப் போடுகிறது
Newslive டிவி.
“கவுஹாத்தி நகரின் முக்கிய வீதியில் பொறுக்கிகளின்
அட்டகாசம். 17 வயது பள்ளிச் சிறுமியை பப்ளிக்காக
மானபங்கப்படுத்தினர்.இதில் ஈடுபட்ட ரவுடிகளை
துணிந்து படமாக்கினார் Newslive டிவி நிருபர்.
பொறுக்கிகளை அடையாளம் காட்டுகிறது எங்கள் டிவி”
என்று செய்தி கொடுத்து, வீடியோவை தகுந்தபடி
எடிட் செய்து, பெண்ணின் முகத்தை மறைத்து,
சம்பவத்தில் ஈடுபட்ட பொறுக்கிகளை முக்கியப்படுத்தி,
குளோசப்பில் அடையாளம் காட்டி, 
புதிய கோணத்தில் செய்தி வெளியிட்டனர்.
இதன் பின்னர் (இரண்டு நாட்களுக்குப் பிறகு தான்-
வியாழக்கிழமையன்று ) டெல்லி நேஷனல் டிவிக்கள்
இதை குத்தகைக்கு எடுத்துக்கொண்டதும்அதன் பின்னர் 
நடந்த சம்பவங்களும் அனைவரும் அறிந்ததே !
இப்போது லேடஸ்ட் விவரத்தை மட்டும் சுருக்கமாக
கூறி விடுகிறேன்.
அஸ்ஸாம் முதலமைச்சர் தருண் கோகோய் 
சாடியதன் பேரில் -
(டிவி அவருடைய அமைச்சருடையது தானே !)
போலீசுக்கு தகவல் கொடுக்காமல் வீடியோ
எடுத்துக்கொண்டிருந்த Newslive டிவி நிருபர்
கௌரவ் ஜ்யோதி நியோக், முதன்மை ஆசிரியர்
அடன் புயன் இருவரும் ராஜினாமா செய்ய நேருகிறது.
விரைந்து செயல்படாத போலீஸ் அதிகாரி இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.
நம்மை பைத்தியக்காரர்களாக்கும் இன்னும் சில 
நிகழ்வுகள் -
டாட்டா ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டை -
(Tata Institute of Social Sciences
(TISS) பெண்களுக்கு இவ்வாறு கொடுமை 
இழைக்கப்படுவதன் பின்னணியைப் பற்றி ஆராய்ந்து
ஒரு ரிப்போர்ட் கொடுக்கும்படி முதலமைச்சர் 
கேட்டுக் கொண்டுள்ளார் !
சம்பந்தப்பட்ட -முகம் தெரியாத - “பார்”ல் குடித்து
விட்டு தெருவில் சச்சரவில் ஈடுபட்டு, இத்தனை 
விளைவுகளுக்கும் காரணமாக இருந்த “அந்தப் பெண்”
(இப்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி, அவர்
திருமணமாகி 2 பெண் குழந்தைகளுக்கும் தாயாம்!)
முதலமைச்சர் தருண் கோகோயை அவரது வீட்டில்
சந்தித்திருக்கிறார். அவருக்கு“ஆறுதல்” கூறிய
முதலமைச்சரிடம் அவர் தனக்கு 50,000 ரூபாய் 
நிதியுதவி(compensation) கொடுத்தால் – தான் 
ஒரு பியூட்டி பார்லர் வைத்து நடத்த உதவியாக இருக்கும்
என்று கேட்டுக் கொண்டதன் பேரில் – அவருக்கு 
ரூபாய் 50,000/- கொடுக்கப்பட்டிருக்கிறது  !
எப்படி போகிறது கதை பார்த்தீர்களா?
ஆக மொத்தம் இதில் இளிச்சவாயர்கள்  யார் ?
நிகழ்ச்சியைப் பார்த்து துடி துடித்து டென்ஷன் ஆன 
நீங்களும் நானும் தான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக