சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ரிசானா நபீக்கின் விடுதலை தொடர்பில் பேச்சு நடத்த உயர்மட்டக் குழுவொன்று நேற்று சவூதி பயணமானது. இவர்களுடன் ரிசானாவின் பெற்றோரும் அங்கு சென்றுள்ளனர். இதேவேளை, அஸ்வர் எம்.பி இன்று பயணம் செய்கிறார். மரணித்த சவுதி குழந்தையின் பெற்றோர்களையும் அவர்களது ஆன்மீகத் தலைவரையும் இலங்கைக் குழு சந்திக்க உள்ளதோடு ரிசானாவையும் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிடுவர்.
ஆறு பேரடங்கிய குழு நேற்று சவூதி சென்ற தோடு அலவி மெளலானா அடங்கலான குழு நாளை (16) சவூதி அரேபியா பயணமாக உள்ளது. எம். எஸ். தெளபீக் எம்.பி. வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் நிசங்க விஜேரத்ன, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக தலைவர் கிங்ஸ்லி ரணவக்க வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அன்சார் அடங்கலான குழுவினரும் ரிசானா வின் பெற்றோரும் நேற்று சவூதி பயண மானதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. அமைச்சர் ரிசாத் பதியுதீனும் இவர்களுடன் இணைய உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அலவி மெளலானா புதன்கிழமை அங்கு செல்வார் என மேல் மாகாண ஆளுநர் அலுவலகம் கூறியது. வியாழக்கிழமை இறந்த குழந்தையின் பெற்றோரை யும் அவர்களுடைய ஆன்மீகத் தலைவரையும் இலங்கைக்குழு சந்திக்க உள்ளது. தான் பணிபுரியும் வீட்டு குழந்தையை கொலை செய்ததாக இலங்கைப் பணிப் பெண்ணான ரிசானா நபீக்கிற்கு சவூதி நீதிமன்றம் கடந்த 2007 ஜூன் 16ஆம் திகதி தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக