ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் தேவையில்லை IRCTC புதிய அறிவிப்பு


ரயில்களில் தான். விரைவாகவும் அதே செலவு குறைவாகவும் தொல்லை இல்லாமல் தூங்கி கொண்டே செல்லலாம் என்று அனைவரும் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். எந்த சிரமமும் இன்றி ஆன்லைனில் ட்ரெயின் டிக்கெட்டுக்களை பதிவு செய்யும் வசதியும் ரயில் பயணிகளுக்கு உள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து பின்னர் நமக்கு கொடுக்கப்படும்  E-Ticket(ERS)பிரிண்ட் எடுத்து கொண்டு சென்று விடலாம். பரிசோதகர் கேட்டால் அந்த E-Ticket (ERS)காட்டினால் போதும். இந்த முறை தான் இது வரை அனைவராலும் கடைபிடிக்கப் பட்டிருந்தது.

இப்பொழுது ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு மேலும் ஒரு புதிய சலுகையாக இனி அந்த E-Ticket(ERS) பிரிண்ட் கூட எடுத்து செல்ல வேண்டாம். VRM (Virtual Reservation Message) எனப்படும் Screen Shot இருந்தாலே போதும். நீங்கள் டிக்கெட் பதிவு செய்து முடிந்ததும் வரும் E Ticket ஐ ஒரு Screen Shot எடுத்து உங்கள் மொபைலிலோ,லேப்டாப்பிலோ அல்லது ஐ-பேட் போன்றவற்றில் சேமித்து கொண்டால் போதும். டிக்கெட் பரிசோதகர் கேட்கும் பொழுது அந்த screen Shot மற்றும் உங்களுடைய ID Proof ஒரிஜினல் காண்பித்தால் போதும் நீங்கள் பயணம் செய்யலாம். (ID Proof இல்லாமல் சென்றால் 


இந்த வசதியை அனைவரும் பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு சுமார் 3 லட்சம் A4 பேப்பர்கள் வீணாவதை சேமிக்க முடியும் என்கிறது ரயில்வே நிர்வாகம். இந்த வசதியின் மூலம் டிக்கெட் பிரிண்ட் வீட்டில் மறந்து விட்டு போகும் பயணிகள் கவலையே பட வேண்டியதில்லை. 

4 கருத்துகள்:

  1. இந்த பதிவை கீழ்க்கண்ட லிங்க்கில் பார்த்தேனே?
    http://www.vandhemadharam.com/2011/09/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அல்ஹம்துலில்லாஹ்...சூப்பர் நியூஸ்...பகிர்ந்ததற்கு ஜசாக்கல்லாஹ் பிரதர்...

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு
  3. பயணச் சீட்டு பதியும் பொழுது செல் எண் தருகிறோமே அதில் PNR எண்-ஐ குறிப்பிட்டுவிட்டால், அதை வைத்தே பரிசோதகரால் பரிசோதிக்க முடியும். அதை விட்டு விட்டு Screen shot எதற்கு.
    இருந்தாலும், முன் போலன்றி இந்த அளவிற்கு வந்ததே மகிழ்சிதான். சீரமைப்பு தொடரும் என எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு