நிகழ்கால சாதனை மனிதர்கள் எம்மை வியக்க வைத்துக்கொண்டிருந்தாலும் கடந்த கால சாதனை மனிதர்களின் செய்திகளை படிக்கும் போது எமக்கு மேன்மேலும் வியப்பு அதிகரிக்கிறது.
நாம் தற்போழுது கடந்த காலத்தில் புகழ்பெற்ற வித்தியாசமான ஒரு திறமை சாலியைத்தான் பார்க்க போகிறோம். சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் குய்லிங் நகரில் வசிக்கும் 55 வயதானவர் ஆiபெவயபெ என்பவர்.
இவர் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் தனது காதுகளில் இருந்து காற்று கசிவதை உணர்ந்தார். இதனால் இவரது மனிதில் சில எண்ணங்கள் உதித்தன. இதை வைத்தே நான் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என எண்ணினார்.
இதற்காக தனது காதில் குழாய் ஒன்றை வைத்து பலூன்களை ஊதி சாதித்தார். பின்னர் இவர் வசித்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு களியாட்ட விழா ஒன்றில் தனது காதுகள் மூலம் வெளிவரும் காற்றினை பயன்படுத்தி 20 விநாடிக்குள் 20 எரியும் மெழுகு திரிகளை அணைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்ந்தினார். இவரது புகைப்படம் கீழே…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக