ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தேர்தல் அதிகாரிகள் அதிரடி - ரூ.41 கோடி இலட்சம், 34 கிலோ தங்கம் பறிமுதல்


எதிர்வரும் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு,

பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்கும் வகையில் பொலிஸார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவு  திருச்சியின் பல பாகங்களிலும் நேற்றிரவு தேர்தல் அதிகாரிகளின் பறக்கும் படையினர்  சோதனை நடத்தினர்.


திருச்சி-திண்டுக்கள் வீதியில் உள்ள கருமண்டபம் சோதனை சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விசேட சோதனை நடத்தப்பட்டது.

அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரொன்று நிறுத்தப்பட்டு சோதனை இடப்பட்டது.  அப்போடு காரிலிருந்து, ரூ.41 இலட்சம் பணம்,  சுமார் 9 1/2 கோடி மதிப்பிலான 34 கிலோ எடைகொண்ட தங்க நகைகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும், திருச்சி பெரிய கடை வீதியில், பிரபல நகை கடை நடத்தி வருவதாகவும், தேனிக்கு சென்று நகைகளை விற்றுவிட்டு திருச்சிக்கு திரும்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பட்டுவாடா செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அரச கருவூலத்தில் அவை ஒப்படைக்கப்பட்டன.  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ரூ.1 லட்சத்துக்கு மேல் நகை, பணம் எடுத்துச்செல்லக்கூடாது என்று விதி அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மேற்கு தொகுதி‌க்கு அ‌க்டோப‌ர் 13ஆ‌ம் தே‌தி இடைத்தேர்தல் நட‌க்கவிருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலின் போது பஸ்ஸில் கடத்தப்பட்ட ரூ.5 கோடிக்கு பொறுப்பேற்று இதுவரை யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக